உலகம் சினிமா

‘RRR’திரைப்பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

RRR திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகர் ராய் ஸ்டீவ்சன் உயிரிழந்தார்.

ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் ‘RRR’ உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இதனிடையே, அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த ராய் ஸ்டீவ்சன் RRR திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிரபல ஆங்கில படமான ‘தோர்’ படத்திலும், பிரபல வெப் தொடரான ‘ரோம்’ ஆகியவற்றிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், 58 வயதான நடிகர் ராய் ஸ்டீவ்சன் ஞாயிற்றுக்கிழமை திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. நடிகர் ஸ்டீவ்சன் மறைவிற்கு RRR திரைப்பட குழுவினர் ட்விட்டரில் தனது இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளனர்.


Share
ALSO READ  ஃப்ரீயாவே நடிச்சுத் தரேன்- யோகிபாபு:
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“நான் குறை கூறவில்லை” தலைவி படம் குறித்து கங்கனா ட்வீட் !

News Editor

“பாலியல் குற்றங்களில் இந்தியா சவூதியை போன்று செயல்பட வேண்டும்” கங்கனா வலிவுறுத்தல்..!

News Editor

ஆபாச பட விவகாரம்- ஊடகங்கள் மீது ரூ.25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி வழக்கு

naveen santhakumar