சினிமா

“RRR” படத்தில் ஆலியா பட்டின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

‘பாகுபலி’ படங்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் இயக்குநர் ராஜமௌலி. இவர், தற்போது ‘ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். டி.வி.வி.தனய்யா தயாரித்து வரும் இப்படத்தில், ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கான், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். 

ALSO READ  திமுகவின் தேர்தல் அறிக்கை மார்ச் 11 வெளியீடு !

இந்தாண்டு அக்டோபர் மாதம் படத்தைத் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ள படக்குழு, படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில், படக்குழு “RRR” படத்தின் அப்டேட் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில், நடிகை ஆலியா பட்டின் பிறந்தநாளை முன்னிட்டு ‘RRR’ படத்தில்  ஆலியா பட்  கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வார்த்தைகளால் மோதிக்கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் :

Shobika

சிம்பு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகியது..!

News Editor

தனுஷ் நடித்த ‘அத்ரங்கி ரே’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு !

News Editor