சினிமா

மூன்றவது முறையாக தனுஷுடன் இணையும் பிரபல நடிகை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றன.

ALSO READ  பிரபலங்களை குறி வைக்கும் கொரோனா… இளம் நடிகருக்கு தொற்று உறுதி!

இதையடுத்து இவர்கள் கூட்டணி படத்துக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் செல்வராகவன் அடுத்ததாக இயக்கவுள்ள படத்தில் மீண்டும் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். செல்வராகவனின் 12 வது படமாக உருவாகும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் பொங்கல் அன்று வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. 

கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ள இப்படத்திற்கு ‘நானே வருவேன்’ பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். அதனையடுத்து இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இரு கதாநாயகிகள் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ALSO READ  "கடவுள் உங்களுடன் இருக்கிறார் கவலை வேண்டாம் சார்" ; எஸ்.ஜே சூர்யா ஆறுதல்!

இதில் ஒரு கதாநாயகியாகக நடிகை தமன்னா நடிக்கயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் வேங்கை, படிக்காதவன் படங்களில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“அவதார்” படத்திற்கு டப்பிங் செய்த பிரபல டப்பிங் கலைஞர் திடீர் மரணம்…!

News Editor

திருமணம் நிச்சயமான 3 மாதங்களில் தன் துணையை பிரிந்த “பட்டாஸ்” பட நடிகை

Shobika

கர்ணன் படக்குழு கொடுத்த அப்டேட் !

News Editor