சினிமா

இந்திய செவ்வியல் இசை பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மரணம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சங்கீத மார்த்தாண்ட பண்டிட் ஜஸ்ராஜ் ஜனவரி 28 ஆயிரத்து 930 ஒரு இந்திய இந்துஸ்தானிய இசை பாடகர் மேலும் ரேவதி கரானாவை சேர்ந்தவர் (இசைப் பயிற்சி பெற்ற பரம்பரை).

இவரது இசை வாழ்க்கை 80 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தது மற்றும் ஏராளமான உயரிய விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார் இந்துஸ்தானி மற்றும் அரை இந்துஸ்தானி குரல்கள் அவரது இசைத்துப்பாகவும், திரைப்பட ஒளிப்பதிவுகளாகவும் மாற்றப்பட்டுள்ளன. 

இந்தியா, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஜஸ்ராஜ் இசையினை கற்றுக் கொடுத்துள்ளார்.  1975இல் இந்திய அரசு இவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ஹரியானாவின்  ஹிஸார் மாவட்டத்தில் உள்ள பிலி மண்ட்டோரி என்ற கிராமத்தில் நடுத்தரவர்க்க பிராமண குடும்பத்தில் பிறந்தவர்.

ALSO READ  காட்டேரி பட தயாரிப்பாளரை கண்டித்த திருப்பூர் சுப்பிரமணியம்..!

ஜஸ்ராஜ் தனது இளமையை ஐதராபாத்தில் கழித்தார். மேலும் குஜராத்தில் சனந்த் நகருக்கு மேவதி கரானாவின் இசைக் கலைஞர்களுடன் இசை பயின்றார். 1946 ஆம் ஆண்டில் ஜஸ்ராஜ் கல்கத்தாவுக்கு சென்று அங்கு வானொலியில் இந்துஸ்தானி இசையை பாடத் தொடங்கினார்.

1962ஆம் ஆண்டில் ஜஸ்ராஜ் திரைப்பட இயக்குனர் வி. சாந்தாராமின் மகள் மதுரா சாந்தாராம் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் சரங் தேவ் பண்டிட் என்ற மகனும், துர்கா ஜஸ்ராஜ் என்ற மகனும் உள்ளனர். இவர் மராத்தி திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

ALSO READ  நாளை சென்னை திரும்புகிறார் ரஜினிகாந்த்…!

இந்தியாவின் பழம்பெரும் பாடகர்களில் ஒருவரான 90 வயதான பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில் “ஜஸ்ராஜின்  இழப்பு நாட்டின் கலாச்சாரத் துறையில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது” என கூறியுள்ளார்.

இவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட பல பிரபலங்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விக்ரம் வேதா இந்தி ரீமேக்கில் இணையும் பிரபல பாலிவுட் நடிகர்..!

News Editor

மீண்டும் இணையும் ‘மாஸ்டர்’ பட கூட்டணி !

News Editor

கர்ணனாக மாறும் தனுஷ்

Admin