சினிமா

என் இளமைக்கு இதுதான் காரணம் ரஜினிகாந்த் பேச்சு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனக்கு வயதானாலும் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருப்பதற்கு இது தான் காரணம் என்ற உண்மையை ரஜினிகாந்த் வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த்,நயன்தாரா நடித்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளிவரும் படம் ‘ தர்பார் ‘. இந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாவதால் படத்திற்கான பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற படத்தின் பிரமோஷன் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது விழாவில் பேசிய ரஜினிகாந்த், தர்பார் படம் மிகப்பெரும் வெற்றியைப் பெறும் என்பதால்தான் இதுபோன்ற விழாக்கள் நடைபெறுகின்றன என தெரிவித்தார். மேலும் தனக்கு 70 வயது ஆவதாகவும், ஆனாலும் தான் சுறுசுறுப்பாகவும் இளமையாகவும் இருப்பதற்கு காரணம் என்ன என்பதை நிறைய பேர் தன்னிடம் கேட்டதாகவும் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த அவர், ” கொஞ்சம் ஆசை, சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம், பேச்சு” இவை தான் என்னுடைய சுறுசுறுப்புக்கு காரணம் என தெரிவித்துள்ளார். மேலும் 15 வருடமாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உடன் ஒரு படத்திலாவது இணைய வேண்டும் என்று ஆசை பட்டதாகவும், அது தற்போது தான் நடந்துள்ளது என்றும் ரஜினி தெரிவித்துள்ளார்.


Share
ALSO READ  கோல்டன் குளோப் விருது போட்டியில் நுழைந்த ‘ஜெய்பீம்’
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் வருகிறார் தேவசேனா – நயதாராவுக்கு பதிலாக புதிய படத்தில் ஒப்பந்தம்?

naveen santhakumar

இணையதள தொடரில் நடிகர் வடிவேலு…

Admin

இனிமே கவர்ச்சிக்கு நோ -நடிகை சமந்தா

naveen santhakumar