சினிமா

கதாநாயகனாக அவதாரமெடுக்கும் நடிகர் லிங்கேஷ்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

கபாலி, பரியேறும் பெருமாள் கஜினிகாந்த் போன்ற படங்களில் நடித்தவர் லிங்கேஷ்.  வில்லனாக பல படங்களில் நடித்த இவர் முதன் முறையாக கதாநாயகனாக வெள்ளித்திரையில் ஜொலிக்க இருக்கிறார்.

மெட்ராஸ், கபாலி, ஜடா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடிக்கும்போதே கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது தோற்றத்தை மாற்ற உடல் எடையை கூட்டவும், குறைக்கவும் செய்து அந்த முழுமையான  ஈடுபாட்டுடன் நடித்திருப்பார்.  

அறிமுக இயக்குனர் ஜெய்அமர்சிங் இயக்கும் படத்தில் முதன் முதலாக கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் நடிகர் லிங்கேஷ்.கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜெய்அமர்சிங் .இவர் லண்டன் திரைப்படக்கல்லூரியில் பயின்றவர்.மேலும் இவர் “என்றென்றும் புன்னகை” படத்தின் இயக்குனர் அஹ்மத்தின் துணை இயக்குனராகவும் பணிபுரிந்தவர்.

இது கல்லூரி மாணவர்கள் சம்பந்தபட்ட  கதை என்பதால் உடல் எடையை குறைத்து கல்லூரி மாணவர்போல இருக்கவேண்டுமென்று இரண்டே மாதங்களில் 16 கிலோ எடையை குறைத்திருக்கிறார் லிங்கேஷ்.கலர்புல்லான அதே சமயம் சமூககருத்தையும் பேசுகிற, கல்லூரி மாணவர்களின் வாழ்வில் நடக்கும் சஸ்பென்ஸ் நிறைந்த படமாகவும் ,  மாணவர்களின் இயல்பான வாழ்வில்  நடக்கும் காதல், கொண்டாட்டம், சோகம் அனைத்தையும் பேசுகிற படமாகவும் இது உருவாக்கப்பட இருக்கிறது.

ALSO READ  வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 

சமீபத்தில் தான் இந்தபடத்திற்கான போட்டோஷீட் நடைபெற்றிருக்கிறது.இந்தப்படத்தை தொடர்ந்து லிங்கேஷ், இயக்குனர் ப்ராங்ளின் இயக்கும் படத்திலும், இதே நிறுவனத்தின்  அடுத்தபடத்திலும் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.தனி இசைக்கலைஞராக அறியப்பட்ட ஆப்ரோ இந்தப்படத்தின் மூலம் திரைப்பட இசையமைப்பாளராகிறார். பிரவீன் மற்றும் சரத் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.

ALSO READ  பிரம்மாண்ட குழுவுடன் கைகோர்க்கும் தனுஷ்:

ஹிந்தியில் வெளியான “டோட்டல் தமால்” படத்தில் பணியாற்றிய  ஜப்பானிய ஒளிப்பதிவாளரான கெய்க்கோ மற்றும் கோபி அமர்நாத்திடம் துணை ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் சுப்பிரமணியம் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.தீபாவளிக்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட் வரை ஹிட்டடித்த மாஸ்டர் ‘குட்டிக்கதை’ பாடல்

Admin

ட்ரெண்டிங்கில் ரகுல் பிரீத் சிங்-ன் Tik Tok

naveen santhakumar

அஜித் ரசிகர்களை கைது செய்ய வாய்ப்பு : கஸ்தூரிக்கு ஆதரவாக கோர்ட் உத்தரவு

Admin