சினிமா

வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா; ரஜினியை வாழ்த்திய மம்முட்டி ! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார்.  இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.   நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ  மருத்துவமனையிலிருந்து நாளை வீடு திரும்புகிறார் சசிகலா..!

ரஜினிகாந்திற்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நாட்டின் பிரதமர், அரசியல் தலைவர்கள்,  திரை பிரபலங்கள்  உள்ளிட்டோர் அவருக்கு  தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர். 

அந்தவகையில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி தளபதி பட பாணியில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கு, வாழ்த்துக்கள் சூர்யா, அன்புடன் தேவா” என பதிவிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தில் மம்முட்டியும், ரஜினியும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடும் பணி இன்று முதல் தொடக்கம் !

#DhadhaShakibPhalkeAward #Rajinikanth #rajinikanth #Superstar #Annaththe #TamilThisai #Cinema #CinemaTrending #TamilNadu #Rajini #kamalhassan #Cinemanews #Mammootty


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி; குஷியில் ரசிகர்கள் !

News Editor

‘வாடிவாசல்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் :

Shobika

No Dress… நியூஸ் பேப்பரை மட்டும் ஆடையாக அணிந்த நடிகை….

naveen santhakumar