அரசியல் இந்தியா

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அச்சிட்ட இயந்திரங்கள் பழைய இரும்புக்கு விற்பனை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அச்சடித்த அச்சு இயந்திரம் கழிவு இரும்பு பொருளாக விற்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

place-where-the-printing-machines-used-to-print-the-constitution-of-india-were-kept-at-the-northern-1579874326

கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசியலமைப்புச் சட்டப் புத்தகங்கள் டேரடூனில் இயங்கி வரும் சர்வே ஆஃப் இந்தியா (SoI) அமைப்பின் சார்பில் ஆயிரம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டது.

  • இதனை பிரேம் பெஹாரி நரைன் ராய்ஸதா (சக்ஸேனா) என்பவர் ஆங்கிலத்திலும்
  • வசந்த் கிருஷ்ணா வைத்யா என்பவர் ஹிந்தியிலும் எழுதியிருந்தனர்.
  • நந்தலால் போஸ் மற்றும் பியோஹர் ராம் மனோகர் சின்ஹா போன்ற சாந்தி நிகேதன் கலைஞர்கள் மூலம் கலை வேலைபாடுகள் செய்யப்பட்டது.
ALSO READ  வயிற்று வலியால் துடித்த இளைஞரின் வயிற்றை ஸ்கேன் செய்த போது காத்திருந்த அதிர்ச்சி:

இந்த கையால் எழுதப்பட்டிருந்த அரசியலமைப்பு சட்டப்புத்தகத்தை கை மூலம் கோர்க்கப்பட்டு அச்சுக்கோர்வை மூலம் போட்டோ லித்தோகிராபிக் முறையில் பிரதிகள் அச்சடிக்கப்பட்டிருந்தன.

Image result for RWcrabtree & sons

இந்த இயந்திரம் பிரிட்டனை சேர்ந்த RWcrabtree & sons நிறுவத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த இயந்திரத்தை பராமரிக்கும் செலவு அதிகமாக இருப்பதாலும், தொழில்நுட்ப மாறுபாடு காரணமாவும் இதனை பழைய இரும்புக்கு விற்றுவிட்டதாக சர்வே ஆப் இந்தியா அமைப்பின் லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

752c00a6-3f05-11ea-bfbd-f812f33ac46f-1

தற்போது பழைய இரும்புக்காக ரூ. 1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் வரலாற்றுப் புகழ் மிக்க இயந்திரத்தை விற்பனை செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் கர்நாடக மாநிலத்தில் ஊரடங்கு அமல்..!

News Editor

FACEBOOK தகவல்கள் திருட்டு -CBI வழக்கு பதிவு :

naveen santhakumar

உலக பெரும் பணக்காரர்களை பின்னுக்கு தள்ளி அதானி முதலிடம் !

News Editor