இந்தியா

குடியரசு தின விழாவில் கவனம் ஈர்த்த 17அடி உயரம் கொண்ட கம்பீர அய்யனார் சிலை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார் சிலையுடன் கூடிய அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததுள்ளது.

71வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜபாதையில் இன்று காலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடியை ஏற்றினார். பின்னர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொண்டார்.

குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக “பிரேசில் அதிபர் ஜய்ர் மெஸியஸ் போல்சனாரோ” கலந்துகொண்டார்.

ALSO READ  கொரோனா தடுப்பு மருந்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜ்ஜூக்கு செலுத்தி பரிசோதனை:

டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழாவில் பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் 16 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது.

Image result for குடியரசு தின விழாவில் தமிழகத்தின் அய்யனார்

அதில் தமிழகத்தின் சார்பில் 17அடி அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தென்னிந்தியாவின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.

ALSO READ  கொரோனாவுக்கான தடுப்பு மருந்துகளை பிரதமர் மோடி ஆய்வு செய்தார் :

17 அடி உயரம் கொண்ட அரிவாளுடன் பிரமாண்ட அய்யனார் அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

65.5 கோடி தடுப்பூசிகளை ஆர்டர் செய்ய ஒன்றிய அரசு ஒப்பந்தம்

News Editor

நேதாஜியின் தியாகத்தை நினைவில் கொள்ளவேண்டும்; பிரதமர் மோடி கருத்து !

News Editor

டெல்லியில் நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம்.. 

naveen santhakumar