இந்தியா

67வது தேசிய திரைப்பட விருதுகள் – யார் யாருக்கு எல்லாம் விருது

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுதில்லியில் இன்று 67வது தேசிய விருதுகள் வழங்கப்படுகிறது, குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு இவ்விருதுகளை வழங்குகிறார். இந்நிலையில் இந்த விழாவில் யார் யாருக்கு எல்லாம் விருது வழங்கப்படும் என்ற பட்டியலை தற்போது பார்க்கலாம்.

67வது தேசிய விருதுகள் 2019ம் ஆண்டு வெளியான மற்றும் 2019ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது.

2019 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படமாக மோகன்லால் நடிப்பில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள மரைக்கர் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டில் சென்சார் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணமாக இதுவரை வெளியாகாமல் உள்ளது.

67th National Awards: From Dhanush, Vijay Sethupathi, Kangana Ranaut,  here's full list of winners- Cinema express

சிறந்த பிராந்திய மொழி திரைப்படங்களுக்கான பட்டியலில் வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் தனுஷுக்கும், போன்ஸ்லே திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கும் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட உள்ளது.

ALSO READ  மகாபாரதத்தில் அர்ஜுனன் அம்பில் அணுஆயுதம்:மேற்கு வங்க ஆளுநர் சர்ச்சைப் பேச்சு

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதினை நடிகர் விஜய் சேதுபதி பெற உள்ளார்.

பங்கா மற்றும் ஜான்சி ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக கங்கணா ரனாவத் சிறந்த நடிகைக்கான விருதினை பெற உள்ளார்.

கே.டி கருப்பு திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருதை நாக விஷால் பெற உள்ளார்.

ALSO READ  பிரதமர் மோடியுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்திற்காக இமான் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது பெற உள்ளார்.

பார்த்திபன் இயக்கி நடித்து வெளியான ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு சிறப்பு தேர்வுக்குழு விருது (ஜூரி சிறப்பு விருது) வழங்கப்பட உள்ளது.

இதேபோல ஒத்த செருப்பு திரைப்படத்தின் ஒலிக்கலவை பணிகளுக்காக ரசூல் பூக்குட்டி தேசிய விருது வழங்கப்பட உள்ளது.

இன்றைய 67வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது கலைச்சேவையை பாராட்டி தாதாசாஹேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.

Image

இதனால் இந்த விழாவில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்த் விஜய் சேதுபதி உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் தற்போது டெல்லி சென்றடைந்துள்ளனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; அச்சத்தில் மக்கள் !

News Editor

ஒற்றுமை சிலையை OLXல் 30,000 கோடிக்கு விற்பனை என விளம்பரம் செய்த நபர்….

naveen santhakumar

கொரோனாவில் இருந்து தப்புவதற்கான இரண்டு எளிய வழிமுறைகள் – ஆதித்ய தாக்ரே…

naveen santhakumar