இந்தியா

90ஸ் கிட்ஸ் அலப்பறை…… கைலாச நாட்டு பெண்களை தங்களுக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி நித்தியானந்தாவிற்கு வேண்டுகோள்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

அனுப்பர்பாளையம் : 

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு நித்யானந்தாவுக்கு 90-ஸ் கிட்ஸ் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா நாட்டின் தங்க நாணயங்களை வெளியிட்டார். 

அத்துடன் ரிசர்வ் பேங்க் ஆஃப் கைலாசா என்ற வங்கியையும் தொடங்கி, 300 பக்கங்கள் கொண்ட பொருளாதார கொள்கையை அவர் வெளியிட்டார்.கைலாசா குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துவிட்டது. 

இதையடுத்து, மதுரையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர் குமார், கைலாசாவில் ஹோட்டல் தொடங்க அனுமதி கேட்டிருந்தார். அதுமட்டுமல்ல திருச்சியில் உள்ள சாரதாஸ் துணிக் கடையும் அங்கு கடை அமைக்க கோரிக்கை விடுத்தது.மேலும் கைலாசாவில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும் என மதுரையில் உள்ள ஒரு விளையாட்டுக் கழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இந்த நிலையில் திருமணத்துக்கு பெண் கிடைக்காமல் மனஉளைச்சலில் உள்ள எங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நித்யானந்தாவுக்கு 90-ஸ் அனுப்பி உள்ள கோரிக்கை போன்ற கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திருமண வேண்டுகோள் என்று தலைப்பிட்ட அந்த கடிதத்தில், “அனுப்புனர் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள், தமிழ்நாடு என்றும், பெறுநர் சுவாமி நித்தியானந்தா, கைலாசா நாட்டு அதிபர், கைலாசா” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தில் சுவாமி, 1990-ம் ஆண்டு முதல் பிறந்த நாங்கள், தற்போது பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தவித்து வருகிறோம். 

ALSO READ  பிரபல ஹோட்டலின் ஒரு கிளையை கைலாசாவில் திறக்க…. நித்தியானந்தாவிடம் கோரிக்கை விடுத்த…. ஹோட்டல் உரிமையாளர்:

எங்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பின் பிறந்த 2000ம் ஆண்டு கிட்ஸ்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனால் நாங்கள் பெரும் மன உளைச்சலில் உள்ளோம்.தயவுசெய்து உங்கள் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களை எங்களுக்கு திருமணம் செய்து கொடுத்து, கைலாசா நாட்டில் ஒரு குடியிருப்புடன், அரசாங்க வேலை கொடுத்து, எங்கள் மனக்கவலையை தீர்க்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் என்றும், இப்படிக்கு மிகுந்த எதிர்பார்ப்புடன் தங்கள் சிஷ்யன்கள் 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைன் சூதாட்டம் – மத்திய அரசு கருத்து..

Shanthi

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்: டெல்லி இளைஞர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…! 

naveen santhakumar

தலை, கைகள் துண்டிக்கப்பட்டு ‘சைக்கோ’ பாணியில் இளம்பெண் கொலை- ஓராண்டுக்குப் பின் சிக்கிய கொலையாளி..

naveen santhakumar