இந்தியா

பெண்களை நிர்வாணமாக்கி சிறுநீரை குடிக்கச் வைத்த கொடூரம்…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

முசாபர்பூர்:-

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூன்று பெண்களை ஊர்மக்கள் சேர்ந்து தாக்கி ஆடைகளை களைந்து, மொட்டை அடித்து, சிறுநீர் குடிக்க வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் அதிக மூடநம்பிக்கைகளுக்கு முட்டாள் தளங்களுக்கும் பேர்போன மாநிலம் பீகார். இதனால் இந்த மாநிலத்தில் அடிக்கடி கும்பல் வன்முறைகள் நிகழும். இந்நிலையில் அது போன்ற ஒரு சம்பவம் தான் தற்பொழுது நிகழ்ந்துள்ளது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் அருகே ஹதாவ்டி (Hathaudi) காவல் நிலையத்துக்கு உட்பட்ட தக்ராம் (Dakrama) என்ற கிராமத்தில் கிராம மக்கள் சேர்ந்து மூன்று பெண்களை சூனியக்காரிகள் என்று முத்திரை குத்தி அவர்களை அடித்து ஆடைகளை களைந்து மொட்டை அடித்து சிறுநீரைக் குடிக்க வைத்துள்ளனர்.

அந்த கிராமத்தில் ஒன்றிரண்டு குழந்தைகள் தொடர்ச்சியாக உயிரிழந்ததையடுத்து பெண்மணிகள் மூவரும் மாய மந்திர வேலைகள் செய்வதால் தான் இவ்வாறு நிகழ்ந்தது என்று கூறி பொதுமக்கள் அவர்களை அடித்து துன்புறுத்தி உள்ளனர். மேலும் ஆடைகளை களைந்து ஊர்வலமாக அழைத்துச் சென்று அவர்களுக்கு மொட்டை அடித்துள்ளனர். உச்சபட்ச கொடுமையாக அவர்களை சிறுநீர் குடிக்க வைத்துள்ளனர்.

ALSO READ  Online Casino Game Titles Play Now In Addition To Win Bi

சம்பவம் கேள்விப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முக்கிய குற்றவாளிகள் 9 பேரை கைது செய்துள்ளனர். மொத்தம் 10 பேர் மீது எஃப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.

இதையடுத்து பெண்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான மாயாதேவி (55) கூறுகையில்:-

ALSO READ  பீட்சா டெலிவரி பாய்க்கு கொரோனா.. 72 குடும்பங்களின் கதி என்ன?....

500க்கும் மேற்பட்ட கிராம மக்கள்  எங்களை சூனியக்காரிகள் (Daayans/Witches) என்று கூறி எங்களை கடுமையாக தாக்கினார்கள். நாங்கள் எந்த மாய வேலைகளும் செய்யவில்லை வெறும் பூஜைகள் தான் செய்தோம் என்றார்.

எங்களைத் தாக்கி எங்களுக்கு மொட்டையடித்து சிறுநீரை குடிக்க வைத்தனர். நாங்கள் குடிக்க மறுத்தால் அவர்கள் எங்கள் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றினார்கள் என்று வேதனையோடு தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக போராடி வருகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் இதுபோன்ற கும்பல் தாக்குதல்களில் பிசியாக உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மேற்குவங்க மாநில முதல்வராக 3-வது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார் மம்தா பானர்ஜி !

naveen santhakumar

விவாத பொருளான ட்ரம்ப் மகள் இவாங்காவின் ஆடை

naveen santhakumar

கட்டுப்பாட்டு அறையையும் விட்டு வைக்காத கொரோனா !

News Editor