இந்தியா

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் – மத்திய அரசு புது திட்டம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சமையல் எரிவாயு உருளை மானிய திட்டம் தொடர்பாக புதிய விதியை மத்திய அரசு கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

lpg subsidy: LPG subsidy jumps 60% as government maintains prices to help  consumers, Energy News, ET EnergyWorld

சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து 1000 ரூபாயை நெருங்கிவிட்டது. ஆனால் சிலிண்டருக்கு அரசு தரப்பிலிருந்து வரும் மானியம் ஓரளவு சுமையை குறைத்து. ஆனால் தற்போது நிறையப் பேருக்கு சிலிண்டர் மானியம் வருவதே தெரியாது.

அனைத்து எல்பிஜி வாடிக்கையாளர்களுமே சந்தை விலையில் முதலில் சிலிண்டரை வாங்க வேண்டும். அதன் பின்னரே மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு தரப்பிலிருந்து நேரடியாக செலுத்தப்படுகிறது.

இதனிடைேய, நீங்கள் எல்பிஜி சிலிண்டர் மானியத்தை வாங்க திட்டமிட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே வாடிக்கையாளராக இருந்தாலோ உங்களுக்காக தான் தற்போது முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மத்திய அரசின் உஜ்ஜவால் யோஜனா திட்டத்தின் கீழ், எல்பிஜி மானியத் திட்டத்தில் மத்திய அரசு சில மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ  8 Books About Sobriety to Help You Drink Less, or Quit Altogether The New York Times

அதன்படி,

பெட்ரோலிய அமைச்சகம் இரண்டு புதிய கட்டமைப்புகளுக்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

முன்னதாக பட்ஜெட்டில் ஒரு கோடி புதிய இணைப்புகள் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இப்போது, ​​மத்திய அரசு துறைகளின் சார்பாக முன்பணம் செலுத்தும் மாதிரிகளை மாற்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, முன்பணம் செலுத்தும் நிறுவனம் ரூ.1600 மொத்தமாக வசூலிக்கும். தற்போது, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMC) முன்பணத் தொகையை EMI-களாக வசூலிக்கின்றன. அதன்படி மானியத் தொகையை வசூலிக்கலாம்.

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 14.2 கிலோ எடையுள்ள சிலிண்டர் மற்றும் அடுப்பு வழங்கப்படுகிறது. வீட்டு சிலிண்டரின் விலை சுமார் ரூ.3200. இந்த தொகையை அரசு மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் (OMCs) செலுத்துகின்றன.

ALSO READ  அதிரடி உத்தரவு…!!!!ஜாதி பெயர்களை வாகனங்களில் பொறிக்க தடை :

பதிவு செய்ய, நீங்கள் முதலில் ஒரு படிவத்தை பூர்த்தி செய்து அருகிலுள்ள LPG விநியோகஸ்தரிடம் கொடுக்க வேண்டும்.

இந்த படிவத்தில், விண்ணப்பித்தாரரான பெண் தனது முழு முகவரி, ஜன்தன் வங்கி கணக்கு மற்றும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணையும் கொடுக்க வேண்டும்.

அதன்பின்னர் உரிய முறையில் ஆய்வு செய்து, நாட்டின் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் தகுதியான பயனாளிக்கு எல்பிஜி இணைப்பை வழங்குகின்றன.

ஒரு நுகர்வோர் EMIஐத் தேர்வுசெய்தால், சிலிண்டரில் பெறப்பட்ட மானியத்திற்கு EMI தொகை சரிசெய்யப்படும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1xBet ваш лучший выбор для ставок на спорт в Казахстан

Shobika

வாரணாசியில் ரூ. 1500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

naveen santhakumar

Mostbet Casino: Best Slot Machine Games 2024 App Logon Hangar Centro De Convençõe

Shobika