இந்தியா

அதிரடி உத்தரவு…!!!!ஜாதி பெயர்களை வாகனங்களில் பொறிக்க தடை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ: 

ஸ்கூட்டர்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் கண்ணாடிகள் அல்லது நம்பர் பிளேட்டுகளில் சாதி பெயர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டுவது தண்டனைக்குரியது என உத்தரப்பிரதேச போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

உத்தர பிரதேசத்தில் சமீப ஆண்டுகளாக ஜாதவ், ஜாட், குர்ஜார், பண்டிட் என்றெல்லாம் சாதிப் பெயரை பெருமையாக வாகனங்களில் ஒட்டிக்கொள்கின்றனர். எந்த கட்சி அதிகாரத்தில் உள்ளதோ அதற்கு ஏற்ப இந்த ஜாதிகளின் பெயர்களு பயன்படுத்தப்பட்டு வருகிறது.பகுஜன் சமாஜ் ஆட்சியின் போது ‘ஜாதவ்’ ஸ்டிக்கர்களைக் கொண்ட வாகனங்கள் அதிகமாகத் தெரிந்தன.

ALSO READ  பெண்களால் மட்டுமே பராமரிக்கப்படும் வஞ்சிநாத் எக்ஸ்பிரஸ்..!!!

சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது, வாகனங்களில் ‘யாதவ்’ என எழுதுவது ஒரு அடையாளமாக இருந்தது. தற்போது யோகி ஆதித்யநாத் ஆட்சியில், சத்திரியா, தாக்கூர் அல்லது ராஜ்புத் போன்ற பெயர்கள் பொதுவாக காணப்படுவதாக கூறுகின்றனர்.இது குறித்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஹர்ஷல் பிரபு என்ற ஆசிரியர், பதிவுத் துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இது பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கு சென்றுள்ளது. 

அவர்கள் உத்தரப்பிரதேச மாநில போக்குவரத்துத் துறைக்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து கூடுதல் போக்குவரத்து ஆணையர் முகேஷ் சந்திரா அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கும் உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதில், ஜாதிப் பெயர் கொண்ட வாகனங்களை கண்டதும் பறிமுதல் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டிராக்டர் பேரணி எதிரொலி; விவசாயிகளின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

News Editor

அரசு எங்கள் கருத்தை ஏற்க மறுக்கிறது – ப. சிதம்பரம் குற்றச்சாட்டு….

naveen santhakumar

அமலுக்கு வந்தது குடியுரிமை திருத்தச் சட்டம்: மத்திய அரசு அரசிதழில்

Admin