இந்தியா

பீகார் முன்னாள் முதல்வர் லாலுவிற்கு கொரோனா தொற்று இல்லை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராஞ்சி:

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்த சூழலில், ராஞ்சி நகரில் உள்ள ரிம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.அதன்பின்னர் மாநில மருத்துவ வாரியம் அளித்த பரிந்துரையின் பேரில் அவரை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், லாலுவின் உடல்நிலை பற்றி ரிம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லாலு பிரசாத்தின் உடல்நலம் அதே நிலையில் நீடித்து வருகிறது. அவர் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என முடிவு வெளிவந்து உள்ளது.

ALSO READ  இந்தியாவில் வேகமாக பரவும் : புதியவகை கொரோனா - ஐசிஎம்ஆர் தகவல்

இதேபோன்று அவருக்கு நடந்த ரத்த பரிசோதனையின் முடிவில் சாதாரண தொற்று ஏற்பட்டுள்ளது என அறிக்கை வெளிவந்துள்ளது. நெஞ்சு பகுதியில் நடந்த எச்.ஆர்.சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் நிமோனியா உள்ளது என தெரியவந்துள்ளது.அவரை மாநில மருத்துவ வாரிய ஆலோசனையின்பேரில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பரிந்துரைக்கப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அசத்தல் ஆஃபர்……4 கிலோ மட்டன்,வறுத்த மீன் உள்ளிட்ட 12 வகை கொண்ட உணவு தட்டை காலி செய்தால் 1 ராயல் என்பீல்ட் பைக்…..

naveen santhakumar

கொரோனாவின் புதிய அறிகுறிகள்- மருத்துவர்கள் எச்சரிக்கை

News Editor

Мостбет: Бонусы На Первый Депозит И Лучшие Ставки На Спор

Shobika