இந்தியா

ஹிந்தி, ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என்ற சுற்றறிக்கையால் சர்ச்சை- பின்வாங்கியது ஜிப்மர்…! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:- 

டெல்லி ஜி.பி.பந்த் (ஜிப்ம்பர்) மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி மொழிகளில் மட்டுமே பேச வேண்டும் என்றும் இல்லை என்றால் தீவிரமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற சுற்றரிக்கையால் சர்ச்சை எழுந்துள்ளது.


டெல்லி ஜி.பி.பிந்த் மருத்துவமனையில் அலுவல் மொழியாக ஹிந்தி மற்றும் ஆங்கிலம் உள்ளது. இந்நிலையில் நோயாளி ஒருவர் செவிலியர்கள் இந்தி ஆங்கிலம் தவிர்த்து மலையாளத்தில் பேசுவதாகவும், இது தங்களுக்கு புரியவில்லை என்றும் குழப்பமாக உள்ளதாகவும் சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிக்கு புகார் அளித்திருந்தார்.

ALSO READ  பிரபல நடிகர் முரளி திடீர் மறைவு…

இதையடுத்து, டெல்லி ஜி.பி.பந்த் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் நேற்று ஒரு சுற்றரிக்கை வெளியிட்டுள்ளது. 


அதில் செவிலியர்கள் பணியிடத்தில் மலையாள மொழி பேசக் கூடாது. இந்தி, ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை மலையாளம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஹிந்தி தவிர்த்த பிற மொழி பேசும் செவிலியர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

டெல்லி மருத்துவமனைகளில் கேரளம், தமிழகம் உள்ளிட்ட தென்னிந்த மாநிலங்களைச் சேர்ந்த செலிவியர்கள் அதிக அளவில் பணியாற்றி வருகிறார்கள்.

ALSO READ  5 மாத குழந்தையின் உயிர்காக்க 6 கோடி ரூபாய் வரி ரத்து; பிரதமர் மோடி அதிரடி!

இந்நிலையில், தங்களிடைய தாய்மொழியில் ஒருவருக்கொருவர் பேசக் கூடாது என்று தடை விதித்திருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது  மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு செவிலியர்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

இதனிடையே கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து மருத்துவமனையில் செவிலியர்கள் மலையாளத்தில் பேசக்கூடாது என்கிற உத்தரவை மருத்துவமனை நிர்வாகம் திரும்பப் பெற்றுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

67வது தேசிய திரைப்பட விருதுகள் – யார் யாருக்கு எல்லாம் விருது

naveen santhakumar

தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை; அதிதீவிர புயலாக மாறிய யாஷ் !

News Editor

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்- மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி… 

naveen santhakumar