இந்தியா

இந்தியாவுக்கு வென்டிலேட்டர்களை பரிசளித்த பிரான்ஸ்… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாரிஸ்:-

இந்தியாவுக்கு 120 வென்டிலேட்டர்களை பிரான்ஸ் பரிசாக அளித்துள்ளது. 

கொரோனா தொற்று பாதித்தோருக்கு அளிக்கப்படும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு அமெரிக்கா முதல்கட்டமாக 100 வென்டிலேட்டர்களை நன்கொடையாக அளித்தது. அதே போல இஸ்ரேல் நாடு  அண்மையில் 50 வென்டிலேட்டர்களை அளித்தது. 

இந்நிலையில் பிரான்ஸ் 50 ஓசிரிஸ்-3 வென்டிலேட்டர்கள் (Osiris-3 ventilators), BiPAP Mode-ன் கூடிய 70 யுவெல் 830 ரக வென்டிலேட்டர்களை (Yuwell 830 ventilators) அளித்துள்ளது.

அவற்றையும் 50 ஆயிரம்  உயர்தர செரோலாஜிக்கல் (High-Quality Serological) ஐஜிஜி/ஐஜிஎம் கொரோனா பரிசோதனை கிட்கள் (IgG/IgM test kits) மற்றும் 50 ஆயிரம் ஸ்வாப்களையும் (swabs) டெல்லியில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் இம்மானுவேல் லீனாய்ன் (Emmanuel Lenain) இந்திய செஞ்சிலுவை பொது செயலாளர் ஆர்.கே. ஜெயினிடம் அளித்தார்.

ALSO READ  புதுச்சேரிக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது; கிரண்பேடி 

கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் எழுதிய கடிதத்தில் இந்தியாவிற்கு பிரான்ஸ் மருத்துவ உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க உள்ளதாக தெரிவித்திருந்தார். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி; 1,000 கோடி ஒதுக்கீடு- நிதியமைச்சர் பாலகோபால்…!

naveen santhakumar

“Yeni Açılan Online Casino Siteleri 2024 Güncel List

Shobika

ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்க முடியும்- யுஜிசி அறிவிப்பு..

naveen santhakumar