இந்தியா

தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைய்த்த பேரன்…கொலையா..???வறுமையா..???

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருப்பதி:

ஆந்திர மாநிலம் வாரங்கல் மாவட்டம் காம ரெட்டியை சேர்ந்தவர் பாலைய்யா (93). ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரது பேரன் நிகில் (20). பாலையாவின் மகன் மற்றும் மருமகள் ஏற்கனவே இறந்து விட்டனர்.இதனால் பாலைய்யா தனது பேரனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரகாலாவுக்கு வந்து வாடகை வீட்டில் குடியேறினர்.

Rights of the Dead under the Law and Legal remedies

இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாலைய்யா உடல்நலக் குறைவால் இறந்தார்.பாலையாவின் உடலை தகனம் செய்ய நிகிலிடம் பணம் இல்லாததால் தாத்தா பிணத்தை பிரிட்ஜில் வைத்து அடைத்தார். தனது நண்பர்களிடம் பண உதவி கேட்டார். நிகிலின் நண்பர்கள் யாரும் பண உதவி செய்யவில்லை. தாத்தா இறந்து 3 நாட்கள் ஆகியும் பிணத்தை அடக்கம் செய்யாமல் பிரிட்ஜிலேயே வைத்திருந்ததால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது.

ALSO READ  2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்...
Deadbody in Fridge: ఫ్రిడ్జ్ లో వృద్ధుడి శవం.. అంత్యక్రియలకు డబ్బులు లేక  దాచానంటోన్న మనుమడు | Shocking incident in Warangal rural Parakala old man dead  body found in Fridge | TV9 Telugu

அக்கம் பக்கத்தினர் வீட்டிலிருந்து ஏன்…???? துர்நாற்றம் வீசுகிறது என்று நிகிலிடம் கேட்டனர். அதற்கு வீட்டில் எலி இறந்து விட்டதாக பொய் சொல்லி சமாளித்தார்.இந்நிலையில் நேற்று பரகாலா போலீஸ் நிலையத்திற்கு சென்ற நிகில் தன்னுடைய தாத்தா பிணத்தை தகனம் செய்ய பணம் இல்லாததால் பிரிட்ஜில் அடைத்து வைத்துள்ளதாக கூறினார்.

Do You Make These 8 Big Mistakes In Your Deviation Investigations

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரிட்ஜில் அடைத்து வைத்திருந்த பாலைய்யா பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலையா உடல் நலக்குறைவால் இறந்தாரா…???? அல்லது கொலை செய்யப்பட்டாரா..???? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

+2 மாணவர்களுக்கு செல்போன் வாங்க ருபாய் 1000 வழங்கப்படும் : முதல்வர் அறிவிப்பு

News Editor

குழந்தைகளின் Online கல்விக்காக பசுவை விற்ற விவசாயி- உடனடியாக உதவிய சோனு சூட்… 

naveen santhakumar

இந்தியாவின் முதல் மின் ரயில் பயணத்தின் வயது 95!

Admin