இந்தியா தமிழகம்

மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் ஆங்கிலத்தில்தான் பதிலனுப்ப வேண்டும்.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மதுரை

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது தொகுதி சார்ந்த பிரச்சனைகள் குறித்து ஒன்றிய அரசிற்கு கடிதம் மூலம் ஆங்கில மொழியில் தெரிவித்து வருகிறார். இது போன்று தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆங்கில மொழி வாயிலாகவே ஒன்றிய அரசிற்கு கடிதம் எழுதி வருகின்றனர்.

Madurai MP moves HC for 'English only' communication between Centre and  State - The Hindu

ஆனால் ஒன்றிய அரசு சு.வெங்கடேசன் கடிதத்திற்கு இந்தி மொழியில் பதில் கடிதம் அனுப்பி வருகின்றனர். இது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவித்தும் இது தொடர்கிறது.

ALSO READ  ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

எனவே இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என தீர்ப்பு வழங்கி உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகின்றார்களோ , அந்த மொழியில் ஒன்றிய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கல்லூரிகள் இந்த கல்வியாண்டு முதல் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும்-தமிழக அரசு

naveen santhakumar

புதுச்சேரியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று !

News Editor

கேரளாவில் 1.80 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் !

News Editor