இந்தியா

கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதற்கான மினி மருத்துவமனை- சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:-

கொரோனா நோயாளிகளை பரிசோதித்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ஐஐடி MediCAB எனும் நடமாடும் மருத்துவமனையை வடிவமமைத்துள்ளது. 

ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

எளிதில் அமைக்கக் கூடிய இந்த நடமாடும் மருத்துவமனை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களுக்கு பரிசோதனை செய்து தனிமை சிகிச்சை அளிக்க முடியும் என்று இதை தெரிவித்துள்ளது.

சென்னை ஐஐடி மெட்ராஸ் வடிவமைத்த MediCAB என்ற நடமாடும் மருத்துவமனை கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Modulus Housing என்னும் இந்த Startup நிறுவனம் நாடெங்கிலும் பரவலாக, இந்த நடமாடும் மருத்துவப் பிரிவை, அதாவது மைக்ரோ ஹாஸ்பிடல்களை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது.

இந்த மெடிகேப்பில் நான்கு மண்டலங்கள் இருக்கும். ஒன்று மருத்துவருக்கான அறை, இரண்டாவது தனிமைப்படுத்தப்படும் வார்டு. மற்றும் இரண்டு படுக்கைகள் கொண்ட ஐசியு பிரிவு ஆகியவை இருக்கும். இந்த மெடிக்கல் நோயாளிகளுக்கு தொற்று ஏற்படாத வகையில் நெகட்டிவ் பிரஷரில் வைக்கப்பட்டிருக்கும். Modulus Housing என்னும் Startup நிறுவனம், ஸ்ரீ சித்ரா திருனல் இன்ஸ்டிடியூட் ஃபார் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) உடன் கூட்டு சேர்ந்து, இந்த திட்டத்திற்கு தேவையான சான்றிதழ்கள் மற்றும் தனிப்பட்ட சாதனங்களை வழங்கியது.

ALSO READ  Glory Casino Online ️ Play on official site in Banglades

2018 ஆம் ஆண்டில் இரண்டு ஐ.ஐ.டியின் முன்னாள் மாணவர்களால் நிறுவப்பட்ட Modulus Housing என்னும் நிறுவனம், IIT-M Incubation Cell  உதவியுடன், முன்னரே எழுப்பட்ட கட்டமைப்புகள் மூலம் வீடுகளை கட்டும் ஒரு புரட்சிகரமான திட்டத்தை கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் செயல் அதிகாரி ஸ்ரீராம் ரவிச்சந்திரன் கூறுகையில்:-

ALSO READ  அண்ணாத்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் வெளியானது

கேரளாவில் இந்த முன்னோடித் திட்டத்தின் மூலம், மைக்ரோ மருத்துவமனைகளின் தொழில்நுட்பம் மற்றும் நன்மைகளைப் பயன்படுத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதை எட்டு மணி நேரத்தில் நான்கு பேர் எளிதாக அமைக்கலாம். இந்த அமைப்பை பிரித்து மடிக்கும் போது, இது எடுத்துக் கொள்ளும் பரப்பளவு  ஐந்து மடங்கு அளவு குறைக்கப்படுகின்றது.

நகர்புறங்களில் நல்லவர்களுக்கு கிடைக்கும் மருத்துவ வசதிகள் கிராமப்புறங்களில் உள்ள அவர்களுக்கு கிடைப்பதில்லை.  மேலும் இந்தியாவை பொறுத்த மட்டில் ஆயிரம் நபர்களுக்கு 0.7 படுக்கைகள் தான் உள்ளது. எங்களது மெடிகேப் அந்த குறையை போக்கும் என்றார். மேலும் இதனை எளிதாக ட்ரக் மூலமாக தேவைப்படும் இடங்களுக்கு கொண்டு செல்லலாம்.

மாடுலஸ் நிறுவனத்தின் தயாரிப்பு பிரிவு செங்கல்பட்டில் தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாகிஸ்தானின் ட்ரோனை சுட்டு வீழ்த்திய இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை..

naveen santhakumar

கிரிப்டோகரன்சிக்கு தடை – மத்திய அரசு திட்டம்!

naveen santhakumar

Pin Up Casino Online Az Azerbaijan Пин Ап Казино Pinup Rəsmi Saytı Pin Ap Bet 30

Shobika