இந்தியா

பூட்டன், மாலத்தீவிற்கு கொரோனா தடுப்பூசியை அனுப்பியது இந்திய !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் ‘கோவிஷீல்ட்’ மற்றும் ‘கோவாக்சின்’ ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, அவற்றை மக்களுக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த தடுப்பூசி செலுத்தும் பணியில் கொரோனா  முன்களப் பணியாளர்களுக்கு முதலில் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பூட்டான், மாலத்தீவு, பங்களாதேஷ், நேபாளம், மியான்மர் மற்றும் சீஷெல்ஸ் ஆகிய 6 நாடுகளுக்கு இன்று கொரோனா  தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி, “உலக சமுதாயத்தின் சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்வதில், நீண்டகாலமாக நம்பிக்கையான துணைவனாக இருப்பதில் இந்தியா கௌரவம் கொள்கிறது” என கூறியிருந்தார்.

இதையடுத்து இன்று, இந்தியாவிலிருந்து பூட்டான் நாட்டிற்கு 1.5 லட்சம் கொரோனா தடுப்பூசிகளும், மாலத்தீவிற்கு 1 லட்சம் தடுப்பூசிகளும் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.


Share
ALSO READ  மற்றவர்களிடம் கதை கேட்கும் எண்ணம் இல்லை "த்ரிஷ்யம் 3" தொடர்பாக இயக்குனர் கருத்து !
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடி: வருமான வரி ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதா??

naveen santhakumar

குழாய் வழியாக இயற்கை எரிவாயு….பிரதமர் மோடி பெருமிதம்….

naveen santhakumar

கேரள அரசை கெளரவித்த ஐக்கிய நாடுகள் சபை…

naveen santhakumar