இந்தியா

தலிபான்களால் பலம் பெறும் தீவிரவாத குழுக்கள்; இந்தியா மீது தாக்குதல்- உளவுத்துறை எச்சரிக்கை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் தாக்குதல் நடத்த அதுவும் குறிப்பாக காஷ்மீரில் தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

Major Attack failed: Delhi Police arrests two Jaish-e-Mohammed terrorists

நேற்றிரவு காபுல் மீது ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு திடீரென தாக்குதல் நடத்தியதில் 13 அமெரிக்க வீரர்கள் உள்பட 90 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்நிலையில் அடுத்த கட்டமாக ஜெய்ஷ்-இ-முகமது என்ற தீவிரவாத அமைப்பு இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ALSO READ  அமெரிக்கா-தலிபான்கள் இடையே கையெழுத்தாகிறது அமைதி ஒப்பந்தம்- இந்தியா பங்கேற்ப்பு..!!!!

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், அங்கிருந்த சிறைச்சாலைகளில் இருந்து பல்வேறு பயங்கரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களும் விடுவிக்கப்பட்டனர். அதில் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தைச் சேர்ந்த 100 பேரும் அடங்குவர்.

அந்த 100 பேரும் மீண்டும் தங்கள் தீவிரவாத குழுத் தலைமையகத்தில் இணைந்துள்ளதால் கூடுதல் பலத்துடன் தாக்குதல் நடத்த சதித் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ALSO READ  அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்பு - தலிபான் அறிவிப்பு

மேலும், இந்தியாவில் நடத்தவிருக்கும் அனைத்துத் தாக்குதல்களுக்கும் ஜெய்ஷ் இ முகமது இயக்கத்துக்கு தலிபான்கள் துணையாக இருக்கும் என அந்த அமைப்பின் முக்கியப் பிரமுகர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

காரை விற்று காற்று(ஆக்சிஜன்) கொடுத்த நெகிழ்ச்சி மனிதர் !

News Editor

குஜராத் முதல்வராகிறார் பூபேந்திர படேல்

News Editor

15 ஆண்டுகளுக்கு பிறகு ரயிலில் பயணம் செய்த இந்திய குடியரசு தலைவர் …!

naveen santhakumar