இந்தியா

கமல்ஹாசன் – தெரிந்து கொள்ள வேண்டிய 10 தகவல்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

1.ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், 1954-ம் ஆண்டு, நவம்பர் 7-ம் நாள் வழக்கறிஞர் டி.சீனிவாசன் – ராஜலட்சுமி தம்பதியருக்குக் கடைசி மகனாகப் பிறந்தார் பார்த்தசாரதி என்கிற கமல்ஹாசன்

  1. 8 ஆம் வகுப்பு வைரை மட்டுமே படித்த கமல் நடிப்பின் மீது இருந்த ஆர்வம் காரணமாக `டி.கே.எஸ்’ என்ற நாடகக்குழுவில் சேர்ந்து பின்னர் சிவாலயா’ என்ற நடனக்குழுவைத் தன் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கினார்.

3 1960-ம் ஆண்டு வெளியான `களத்தூர் கண்ணம்மா’ படத்தற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை அன்றைய குடியரசுத் தலைவரிடம் பெற்றார்

  1. நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்கும்சவாலே சமாளி’ படத்தில் சிவாஜிக்கும் `அன்புத்தங்கை’ படத்தில் ஜெயலலிதாவுக்கும் நடன ஆசிரியராக இருந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்
  2. சிகப்பு ரோஜாக்கள்’,நாயகன்’, அவ்வை சண்முகி’,அன்பே சிவம்’, புதுப்பேட்டை’,மன்மதன் அம்பு’ எனப் பல்வேறு திரைப்படங்களில் 70-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார் நடிகர் கமல்
ALSO READ  குடும்பத்தில் ஒருவருக்கு வேலை - ரெயில்வே துறை அறிவிப்பு
  1. 2002-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் நாள், சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத் தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாகப் பதிவு செய்திருக்கிறார் கமல்

7.1990ல், அவரின் அ நடிப்புத் திறமைக்காக, இந்திய அரசு அவருக்கு மிக உயரிய விருதான ‘பத்மஸ்ரீ’ விருதை வழங்கி கௌரவித்தது

  1. 18 முறை ஃபிலிம்பேர் விருதுகள் பெற்ற பெருமை உடையவர் கமல்ஹாசன்
  2. 1980-களில் மய்யம்’ என்ற பத்திரிக்கையைத் தன் ரசிகர் மன்றத்தினர் மூலம் ஆரம்பித்து நடத்திவந்தார். அதேபோல் அரசியல், சினிமா, காஷ்மீர் பிரச்சனை, போதை விழிப்புணர்வு எனப் பல தலைப்புகளில் கட்டுரைகள் எழுதிதேடித் தீர்ப்போம் வா’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டவர். இதுவே இவருடைய அரசியல் பயணத்திற்கு ஆரம்பமாக அமைந்தது
  3. மக்கள் நீதி மய்யம் என கட்சி ஆரம்பித்து தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன் 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு 3.7 சதவீத வாக்குகளை பெற்றார்.

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

1win Bahis Sitesi Türkçe Giriş Yap Ve Kaydol İlk Para Yatırma Işleminizde 0 Kazanın

Shobika

மேலும் உ.பி.யில் பயங்கரம்…….ஒருதலைக்காதலால் நேர்ந்த விபரீதம்:

naveen santhakumar

விவாகரத்து பெற்ற மனைவிக்கு எப்போதிலிருந்து ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும்?????நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

naveen santhakumar