இந்தியா

பேருந்து கட்டணம் 25 சதவீதம் உயர்வு… 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திருவனந்தபுரம்:-

கேரளாவில் பேருந்து கட்டணம் 25 சதவீதம் வரை அம்மாநில அரசு உயர்த்தியுள்ளது.  

கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் வருமானம் இல்லாமல் பேரிழப்பை சந்தித்துள்ளன. ஊரடங்கு காலத்தில் கேரள போக்குவரத்துத்துறை 37 கோடி ரூபாய்க்கும் மேல் இழப்பை சந்தித்தது.

தொழிலாளர்களுக்கு ஊதியம் போன்றவற்றை வழங்குவதிலும் மாநில அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிபதி எம். ராமச்சந்திரன் தலைமையிலான விசாரணைக் குழு அரசுக்கு 30 முதல் 50 சதவீதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்த பரிந்துரை செய்தது.

புதிய பேருந்து கட்டணம்.

இதையடுத்து, பேருந்து கட்டணத்தை 25 சதவீதம் வரை உயர்த்த கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாக இருக்கும். முதல் 5 கிலோமீட்டருக்குப் பதிலாக இனி இரண்டு கிலோமீட்டர் வீதம் கட்டணம் அதிகரிக்கப்படுகிறது. 

ALSO READ  டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

அதேவேளையில் குறைந்தபட்ச கட்டணமாக 8 ரூபாய் அப்படியே இருக்கும் என்று கேரள போக்குவரத்து துறை அமைச்சர் A.K.சசீந்திரன் கூறினார். 

அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதால், தனியார் பேருந்து உரிமையாளர்களும் கட்டணத்தை உயர்த்த அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். 

ALSO READ  இந்தியாவில் மீண்டும் இரண்டு லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு !


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Официальный сайт MostBet зеркала, казино, приложени

Shobika

முன்னாள் மத்திய அமைச்சர் காலமானார்:

naveen santhakumar

100 கோடி தடுப்பூசி – இந்தியா புதிய சாதனை!

naveen santhakumar