இந்தியா

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளும் இந்திய வீரர்களுடன் ஜூலை 13ம் தேதி மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.

PM Modi sends words of encouragement to Tokyo-bound athletes ahead of  Olympics

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.

ALSO READ  Играйте В достаточно Чем 5000 лучших Бесплатных Игровых Автоматов!

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் முதல் குழு வரும் 17-ஆம் தேதி டோக்கியோ புறப்படவுள்ளதாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் நரிந்தர் பாத்ரா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள இந்திய வீரர் மற்றும் வீராங்கணைகளுடன் பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி மாலை 5 மணிக்கு கலந்துரையாடுகிறார்.

ALSO READ  சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கபில்தேவ்:

காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கலந்துரையாடலில் வீரர்\வீராங்கணைகளை பிரதமர் ஊக்கப்படுத்த உள்ளார்.

மேலும், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர் மற்றும் வீராங்கணைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவிக்க உள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Игры Казино Онлайн Бесплатн

Shobika

சாதிமறுப்பு திருமண சான்று; மதம் மாறியவர்களுக்கு கிடையாது: உயர்நீதிமன்றம்

naveen santhakumar

சின்ன குஷ்பூ நடிகை ஹன்சிகா பிறந்த நாள் இன்று

News Editor