இந்தியா

டெல்லியில் நான்காவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்-பொதுமக்கள் அச்சம்.. 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

டெல்லி:-

தலைநகர் டெல்லியில்  சுமார் ஒரு மாதத்தில் இன்று 4ஆவது முறையாக நேரிட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

டெல்லியின் பிதம்புரா பகுதியை மையமாகக் கொண்டு இன்று 4ஆவது முறையாக  மீண்டும் லேசான நிலநடுக்கம் நேரிட்டது.

ரிக்டர் அளவுகோலில் 2.2ஆக நிலநடுக்கம் பதிவாகி இருப்பதாக இந்திய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இந்த நில அதிர்வு காலை 11:28 மணிக்கு பூமிக்கு கீழே எட்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறியுள்ளது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்தனர். இந்நிலநடுக்கத்தில் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

கடந்த ஏப்ரல் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் டெல்லியில் இரு நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டது இது ரிக்டர் அளவுகோலில் முறையே 3.5 மட்டும் 2.7 ஆக பதிவாகி இருந்தது. இதேபோல கடந்த மே  பத்தாம் தேதி வடகிழக்கு டில்லியில் வாஸிர்பூர் பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டது ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆக பதிவானது.

ALSO READ  ரஷ்யாவில் நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை...


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வட அரபிக்கடலில் ‘ஷாகீன்’ புயல்- புயல் எச்சரிக்கை

News Editor

விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை :

naveen santhakumar

சிறந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது

News Editor