இந்தியா

“உபி” யை தொடர்ந்து “மபி” யிலும் மதமாற்றத்திற்கு தடை..! 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பாஜக ஆளும் கட்சியாக உள்ள  உத்திரப்பிரதேச மாநிலத்தில் இச்சட்டத்திற்கு முன்னரே  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மத்தியப்பிரதேச அரசும் கட்டாய மத மாற்றத்திற்கு தண்டனை விதிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் மத சுதந்திரம் மசோதா 2020 தாக்கல் செய்யப்பட்டது. அதனையடுத்து இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடும் தனி நபரோ, நிறுவனத்தைச் சார்ந்தவரோ அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், 1-5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதிக்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்தார்.

மதம் மாற்றப்பட்ட நபர் ஒரு பட்டியலின அல்லது பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் அல்லது வயது குறைந்தவராக இருந்தால், குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு 2 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனையும், 1 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டிருப்பதாக மத்திய நரோட்டம் மிஸ்ரா குறிப்பிட்டார். மேலும் தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் இரண்டு மாதங்களுக்கு முன்னதாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும் மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ  மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…!

இந்நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக சட்டம் கொண்டுவர முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#mathyapradesh #bjp #lovejihad #tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்… பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ஒதுக்கீடு..

naveen santhakumar

காதலை விட மறுத்ததால் பெண் உயிருடன் எரித்து கொலை..!

News Editor

கவர்னரிடம் ஸ்டாலின் அளித்த 97 பக்கம் கொண்ட ஊழல் புகார் :

naveen santhakumar