இந்தியா

நரேந்திர மோடி உரையின் முக்கிய அம்சங்கள்… பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ஒதுக்கீடு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு உரை நிகழ்த்தி வருகிறார். 

அதில் அவர் கூறிய சில முக்கிய அம்சங்கள்.

ஒரே வைரஸ் நமது வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.

4 மாதங்களில் 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிராக 4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது.

கொரோனா வைரஸ் இதுவரை உலகம் பார்த்திராத ஒரு போர். கொரோனா வைரஸ் ஒட்டு மொத்த உலகத்தையே சூறையாடி விட்டது.

இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும்.

இந்திய மருந்துகள் உலகிற்கே தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது.

ALSO READ  Azərbaycandakı bukmek

உலகம் என்பது ஒரே குடும்பம் என்பதுதான் இந்தியாவின் நிலை. நமக்கு எப்போதும் சுயநலம் இல்லை.

நாம் யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும். 

தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம். நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 20 லட்சம் கோடி ஒதுக்கீடு. இது இந்திய ஜிடிபி-ல் 10 சதவீதமாகும்

உலகம் ஏற்பட்டு வரும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம்.

வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே சரியான தருணம் அதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

ALSO READ  உலகில் 10.54 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு !

உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள்.

ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் (PPE) மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம். முன்பு இந்தியாவில் PPEகள்  தயாரிக்கப்படவில்லை.

y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்.

இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.

நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஐந்தாண்டு நீட்டிக்க ஒப்புதல்..!!

Admin

Букмекерская Контора Mostbet: Лучшие Коэффициенты И Опыт Ставок В Реальном Времени Онлай

Shobika

அனைத்து இறுதியாண்டு (PG&UG) செமஸ்டர் தேர்வுகளும் ரத்து…

naveen santhakumar