இந்தியா

மாம்பழத்தின் விலை ரூ.2.70 லட்சம்…! பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

போபால்:-

மத்திய பிரதேச மாநிலத்தில் 2 மாமரத்தில் விளைந்துள்ள 7 மாம்பழங்களை பாதுகாக்க நான்கு காவலர்கள் மற்றும் ஆறு நாய்களை காவலுக்கு வைத்துள்ளார் தோட்டத்துக்கு உரிமையாளர்.

In MP, Army Of Guards, Dogs Hired To Protect 7 Miyazaki Mangoes; Price Will  Blow You Away || 7 பழங்களை பாதுகாக்க 4 காவலர்கள் 6 நாய்கள்...! மாம்பழத்தின்  விலை ரூ.2.70 லட்சம்...!

எதே, 7 மாம்பழத்துக்கு இவ்வளவு 4 ஆளு, 6 நாய் காவலா??? கேக்க தோணுதா. அந்த தோட்டத்தில் விளையும் அரிய மாம்பழங்களின் விலையை நீங்கள் கேட்டால் உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்ளலாம். கேட்கவே சுரஸ்யமாக இருக்கிறது அல்லவா வாருங்கள் அதை பற்றி முழதாக பார்ப்போம்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபால்பூர் மாம்பழ தோட்டம் வைத்து இருப்பவர்கள் ராணி- சங்கல்ப் பரிஹார் என்ர தம்பதிகள். தங்களுடைய தோப்பில் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு மாமரகன்றுகளை தங்களது நிலத்தில் நட்டனர்.

சென்னைக்கு ரயிலில் வரும் போது அறிமுகமான ஒரு நபரிடமிருந்து அவர்கள் அந்த மரக்கன்றை பெற்றனர். இவர்கள் அதை சாதாரண மாமரமாக தான் இருக்கும் என நினைத்தனர். இந்த மரம் வளர்ந்த போது அதிலிருந்து ரூபி ரெட் நிறத்தில் மாங்காய்கள் காய்த்துள்ளது.

ALSO READ  மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாளை பாரத் பந்த்..!
Miyazaki: All you need to know about the world's most expensive mango  variety en - EBENE MAGAZINE

இதை பார்க்கும் போது அவர்களுக்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை. இதற்க்கு தனது அம்மாவின் பெயரான தாமினி என பெயரிட்டுள்ளார். பின்னர் அந்த மாங்காய் வளர வளர அது வித்தியாசமான கலரிலிருந்தது. இதையடுத்து அவர்கள் அந்த மாங்காய் என்னவாக இருக்கும் என ஆன்லைனிலும், விவசாய ஆய்வளர்களிடமும் விசாரித்தனர்.

அப்போது தான் உலகின் மிக விலையுயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக அறியப்படும், ஜப்பானின் மியாசாகி மாம்பழங்கள் என்பது தெரியவந்தது. தெரியாமல் பயிரிட்ட மாம்பழ மரக்கன்றுகள் ஜப்பானின் மியாசாகி மாம்பழங்களுக்கு சொந்தமானது என்பதை அறிந்ததும் ஆச்சரியம் அடைந்தனர். ஏனெனில், அவை தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை விட அதிக அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இந்த மியாசாகி மாம்பழத்தின் விலை கிலோ 2.7 லட்சம் ரூபாய் வரை கடந்த ஆண்டு விற்பனை ஆகி உள்ளது. இதனால் தங்களது 7 மாம்பழங்களை திருடர்களிடமிருந்து காப்பாற்ற இந்த தம்பதியினர் 4 பாது காவலர்களையும் 6 நாய்களையும் 24 மணி நேரமும் பாதுகாக்க வைத்துள்ளனர்.

ALSO READ  கொரோனா தடுப்பூசி ஒன்றின் விலை ரூ. 1000- இந்தியர்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்???? 

இதுகுறித்துசங்கல்ப் பரிஹார் கூறுகையில்:-

கடந்த ஆண்டு எங்கள் தோட்டத்தில் புகுந்த திருடர்கள் விலை உயர்ந்த ஜப்பான் வகை மியாசாகி மாம்பழத்தை திருடி சென்றனர். இந்தியாவில் இந்த மாம்பழம் அரிதினும் அரிதாக காய்க்கும். இதன் விலையும் சர்வதேச சந்தையில் அதிகம். அதனால் இந்த முறை மியாசாகி பழங்களை காக்கவே காவலுக்கு ஆட்களையும், நாய்களையும் தோட்டத்தில் வைத்துள்ளோம் என்றார்.

இந்த மியாசாகி வகை மாம்பழம் இந்தியாவில் மிகவும் அரிது. இதன் பூர்வீகம் ஜப்பானின் மியாசாகி நகரம். அதனலேயே இதன் பெயர் மியாசாகி என பெயரிட்டுள்ளனர.

மாணிக்கங்களைப் போல சிவப்பு நிறத்தில் பளபளக்கும் அவை சர்வதேச சந்தையில் ஒரு கிலோவுக்கு ரூ .2.70 லட்சத்திற்கு விற்கப்படுகின்றன. ரூபி சிவப்பு நிறத்தில் ‘சூரியனின் முட்டை’ என்று அழைக்கப்படும் ஒவ்வொரு மாம்பழமும் தலா 21,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒரு கையாலேயே மாணவர்களுக்கு மாஸ்க் தைத்துக்கும் மாற்றுத்திறனாளி சிறுமி…

naveen santhakumar

வாடகைத் தாய் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்……

naveen santhakumar

Играйте В мои Любимые Слот

Shobika