இந்தியா

களத்தில் குதித்த சிறுவர்கள்; ரோட்டிற்கே வந்த அதிகாரிகள்…!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எவ்வளவு முறை எடுத்துச் சொல்லியும் அதிகாரிகள் அலட்சியமாக இருந்த காரணத்தால் சிறுவர்களே களத்தில் இறங்கி குண்டும் குழியுமான சாலையை சரி செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

Odisha Children Repair Damaged Village Road In Bhadrak – Odisha Bytes

ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தில் உள்ள கெலட்டுவா ஆதிவாசி காலனியில் இருந்து பாகமரா கிராமத்தை இணைக்கும் சேதமடைந்த சாலை மிகவும் மோசமான நிலையில் இருந்தது. சாலையை சரி செய்ய கோரி எத்தனையோ முறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில், பாக்மாரா கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சாலையை சரிசெய்யும் வேலையை தங்களை எடுத்துக்கொண்டனர்.

ALSO READ  ரெயில்வே தொழிற்பயிற்சி முகாம் தொடக்கம்..!!

பைகளில் கற்களை நிரப்பி, அவற்றை சைக்கிளில் கொண்டு சென்று பள்ளங்களில் நிரப்பி சாலையை சமப்படுத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் தங்களால் முடிந்த வரை சாலையை சரிசெய்த அவர்கள்,

மக்கள் இந்த சாலையை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது, சாலையை சரிசெய்ய யாரும் வரவில்லை என்பதால், நாங்களே இதைச் செய்தோம் என்று கூறியுள்ளனர்.

சிறுவர்கள் சாலையை சரிசெய்தது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத்தொடர்ந்து சாலையை சரிசெய்யாமல் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக பத்ராக் BDO மனோஜ் பெஹெரா கூறியுள்ளார்.

ALSO READ  கொரோனாவை கட்டுப்படுத்த யோகியிடம் ஆலோசனை கேட்கும் ஆஸ்திரேலியா..!

மேலும், BDO மனோஜ் பெஹெரா மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், சாலை கட்டுமானத்திற்கான டெண்டரை எடுத்த ஒப்பந்தக்காரர் அந்த வேலையை பாதியிலேயே விட்டுவிட்டது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுவிசாரணை மேற்கொண்டு அறிக்கை அளிக்க BDO உத்தரவிட்டுள்ளார்.

யாரும் கண்டுகொள்ளாமல் விட்ட சாலையை தாங்களாகவே முன்வந்து தங்களால் முடிந்தவரை சரி செய்ய முயன்ற இந்த குட்டி ஹீரோக்களை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா தொற்றால் எனக்கு ஏற்பட்ட நன்மை- மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான்… 

naveen santhakumar

கடற்கரையை நோக்கிச் செல்லும் லட்சக்கணக்கான ஆலிவ் ரிட்லி ஆமைகள்- வைரல் வீடியோ…

naveen santhakumar

“ஒரு சிலருக்கே சவாலான சூழ்நிலையில் மகிழும் தைரியம் உள்ளது”: ராணுவ வீரர்களின் வீடியோவை பகிர்ந்த-வீரேந்திர சேவாக்… 

naveen santhakumar