இந்தியா

உலக நாடுகளுக்கு உதவ மருந்து உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும்: பிரதமா் மோடி உறுதி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக போராடும் நாடுகளுக்கு உதவும் வகையில், மருந்து உற்பத்தி துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் நேற்று அவர் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, கொரோனா தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றை குணப்படுத்தும் தீர்வை கண்டறிவதற்கான ஆய்வை இரு நாடுகளும் இணைந்து செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மருந்து உற்பத்தியில் உலக நாடுகளுக்கு இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்றும், மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறும் என்றும் ட்ரூடோவிடம் மோடி உறுதியளித்தார்.

இதுதொடா்பாக மத்திய அரசு சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

உலகளவில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பின் தற்போதைய நிலை குறித்து பிரதமா் மோடி, கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு மேற்கொள்ளப்படும் உலகளவிலான முயற்சிக்கு, குறிப்பாக தடுப்பூசி அல்லது நோய்த்தொற்றை குணப்படுத்தும் தீா்வை கண்டறிவதற்கான ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவும், கனடாவும் இணைந்து செயல்படுவது அா்த்தமுள்ள வகையில் பங்களிக்கும் என இருவரும் முடிவு செய்தனா். கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு உலகளாவிய ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் இருப்பது, மருந்துவ விநியோகம் இடையூறின்றி நடைபெறுவது, கூட்டாராய்ச்சியில் ஈடுபடுவது குறித்த கருத்துகளிலும் இருவரும் உடன்பட்டனா்.

ALSO READ  ஊரடங்கு நீட்டிப்பு; கடைகளில் குவியும் பொதுமக்கள் !

அப்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக உலக நாடுகள் போராடி வருவதால், அதற்கு உதவிடும் விதமாக மருந்து உற்பத்தித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு தொடரும் என்று பிரதமா் மோடி உறுதியளித்தாா். 

இந்த நெருக்கடியான வேளையில் கனடாவில் உள்ள இந்தியா்களுக்கு உதவி புரிந்து, ஆதரவளித்து வருவதற்கு அந்நாட்டு அரசுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா். 

ALSO READ  லண்டனில் இருந்து இந்திய வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று..!

இதேபோல் இந்தியாவில் உள்ள கனடா நாட்டு குடிமக்களுக்கு ஆதரவளித்து வரும் மத்திய அரசுக்கு ஜஸ்டின் ட்ரூடோ பாராட்டு தெரிவித்தாா்.

இதுகுறித்து பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்:-

கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவுடன் உரையாடினேன். இந்த கடினமான வேளையில் கனடாவில் உள்ள இந்திய குடிமக்களை பாதுகாத்து வருவதற்கு நன்றி தெரிவித்தேன். கொரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்கு இந்தியா, கனடா இடையிலான கூட்டுறவு மிக முக்கியமானதாகும். இதில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மருந்து விநியோகம் தடையின்றி நடைபெறுவதும் உள்ளடங்கும் என்று தெரிவித்தாா்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Pin Up yüklə Android cihazları üçün Pin Up bet indi

Shobika

Pin-up Casino Resmi Web Sitesi Online Casinoda Gerçek Parayla Oynayı

Shobika

Bonus 125% + 250 F

Shobika