தமிழகம்

ஊரடங்கு நீட்டிப்பு; கடைகளில் குவியும் பொதுமக்கள் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தமிழக அரசு கடந்த 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பால், மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் கடைகள் காலை 8 மணி முதல் 10 மணி வரை திறக்கலாம் என தளர்வுகள் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

ALSO READ  மத்தியக் கல்வி அமைச்சகத்தின் தேசிய நல்லாசிரியர் விருது தமிழ்நாட்டிலுள்ள இருவருக்கு வழங்கப்படுகிறது

இதனையடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இன்றும் நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டார். மேலும் பலர் தங்கள் ஊருக்கு செல்ல இன்று மற்றும் நாளை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள மளிகை கடைகள், மொபைல் ஷாட்கள், காய்கறி கடைகள் பெட்டி கடைகள் என அனைத்து கடைகளும் தற்போது முதலே திறக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் கடைகள் திறக்கும் அறிவிப்பை கண்ட பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

VAO-க்கு லஞ்சம் தருவதற்காக பிச்சை எடுத்த மூதாட்டி:

naveen santhakumar

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்து புகார் அளிக்க புதிய வாட்ஸ் ஆப் எண், மின்னஞ்சல் அறிமுகம்

Admin

அரசு பேருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

News Editor