உலகம்

கொரோனா பிடியிலிருந்து காக்க பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வர செய்யும் சடங்கு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டில் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றுவதற்காக பெண்களை நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்ய அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார்.

ஐவரி கோஸ்ட் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ராஜ்யம் சான்வி (Kingdom of Sanwi). இந்த ராஜ்ஜியம் உலக அளவில் கோக்கோ உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது.

இதன் மன்னர் King Amon N’Douffou V (Enan Eboua Koutoua Francis) நாட்டில் உள்ள மக்களை கொரோனா வைரஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவதற்காக பேய் ஓட்டும் (Exorcise Ceremony) நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். இதன் மூலமாக தெய்வீக அருள் கிடைத்து தீய சக்திகள் நாட்டை விட்டு அகன்று மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

கடந்த வாரம் கூட ஐவரிகோஸ்ட் மன்னர் பேய் ஓட்டும் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். இதில் நூற்றுக்கணக்கானோர் மட்டுமே கலந்து கொண்டனர். ஏனெனில் கொரோனா பரவல் அச்சம் காரணமாக அதிகப்படியான மக்கள் பங்கேற்கவில்லை. 

அந்நிகழ்வின் போது “நான் கடவுளிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் மக்களை இந்த கொடிய வைரஸ் பிடியிலிருந்து காக்க வேண்டும் உலகிலிருந்து இந்த வைரஸ் முற்றிலுமாக ஒழியவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்” என்று மன்னர் தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பாளர் மூலமாக மக்களிடம் இது தெரிவித்துள்ளார்.

ALSO READ  நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்தி நடுவில் "லவ் ப்ரபோஸ்"- பற்றி எரிந்த வீடு..! 

இதையடுத்து பாரம்பரிய பெண் குணப்படுத்தும் அவர்கள் அல்லது Komians-கள்  தூய வெள்ளை நிற உடை அணிந்து மதுவை தெளித்து இந்த சடங்கை முடித்து வைத்தனர்.

இதையடுத்து மன்னர் பெண்களின் நிர்வாணமாக ஊர்வலம் வரச்செய்யும் சாங்கியத்தை நடத்துவதற்காக திட்டமிட்டுள்ளார்.  பொதுவாக இந்த சாங்கியம் வரட்சி பஞ்சம் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர் நேரங்களில் நடத்துவார்கள்.

ALSO READ  கொரோனா நோயாளிகளுக்கென பிரத்யேக மெத்தையை வடிவமைத்த இலங்கை மாணவி......

இதற்குப் பெயர் அட்ஜாலவ் (Adjalou). மக்களை பாதுகாப்பதற்காகவே இந்த சாங்கியம் நடத்தப்படுவதாகவும், இது மிகவும் ரகசியமாக நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊர்வலம் நடைபெறும் சமயத்தில் ஆண்கள் மற்றும் குழந்தைகள் கட்டாயம் வீட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலம் நடைபெறும் நாளுக்கு முந்தைய தினம் வரை யாருக்கும் தெரியப்படுத்த படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஐவரி கோஸ்ட் நாட்டில் இதுவரை ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐவரிகோஸ்ட் நாட்டில் 40 சதவீதம் பேர் முஸ்லிம்கள் 40 சதவீதம் பேர் கிறிஸ்தவர்கள் எஞ்சிய 20 சதவீதம் பேர் விலங்குகள் இயற்கை என அனைத்தையும் வழிபடும் Animist-கள் ஆவர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அமெரிக்காவில் கலவரம்: ஜார்ஜ் பிளாயட் கொலையை வீடியோ எடுத்த 17 வயது சிறுமி…

naveen santhakumar

தேர்தல் வரலாற்றிலேயே அதிகம் செலவு செய்யப்பட்ட தேர்தல் இதுதான்:

naveen santhakumar

டைனோசரின் கால் தடத்தை கண்டுபிடித்த 4 வயது சிறுமி:

naveen santhakumar