இந்தியா

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த 5 – ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது . இதைத் தொடர்ந்து ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆசிரியர் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்தார் . இந்த திருவிழா வரும் 17 – ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது .

இந்திய மொழி அகராதி , பேசும் புத்தகங்கள் , சிபிஎஸ்இ – யின் பள்ளி தர உறுதி சைகை மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு , ஆசிரியர்களுக்கான நிபுன் பாரத் பயிற்சி திட்டம் , வித்யாஞ்சலி இணையதளம் ஆகியவற்றையும் பிரதமர் மோடி நேற்று தொடங்கிவைத்தார் .

வித்யாஞ்சலி இணையதளம் மூலம் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த தன்னார்வலர்கள் , தனியார் நிறு வனங்கள் தங்களது பங்களிப்பை வழங்க முடியும் .

ALSO READ  ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேருக்கு ஜாமின் - மும்பை உயர் நீதிமன்றம்

விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது : கொரோனாவால் எழுந்துள்ள நெருக்கடியான சூழ்நிலையிலும் மாணவர்களின் எதிர் காலத்திற்காக ஆசிரியர்கள் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர் .

உலகம் அதிவேகமாக மாறி வருகிறது . இதை கருத்தில்
கொண்டு , எதிர் காலத்துக்கு ஏற்ற தேசிய கல்விக் கொள்கை இந்தியாவில் அமல் செய்யப்பட்டிருக்கிறது.

ALSO READ  Pin Upwards Turkey Online On Line Casino Resmi Sitesi Giriş Ve Kayı

அரசுப்பள்ளிகளில்கல்வியின் தரத்தை உயர்த்த அனைத்து தரப்பினரும் தங்களது பங் களிப்பை வழங்க வேண்டும் .

குறிப்பாக தனியார் துறையினர் அதிக பங்களிப்பை பங்களிப்பை வழங்க வேண்டுகிறேன் . இந்திய இளைஞர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் அனைவருக்கும் பங்கு இருக்கிறது என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்று இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்..

naveen santhakumar

கிராமங்களின் கன்னட பெயரை மாற்றிய கேரளா அரசு: கர்நாடகா-கேரளா மோதல் ..

naveen santhakumar

கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த கொத்தமல்லி செடி…

naveen santhakumar