இந்தியா

சீன வங்கிகளுக்கு ரூ.5,400 கோடியை செலுத்துமாறு அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லண்டன்:-

அனில் அம்பானி Industrial and Commercial Bank of China, China Development Bank and Exim Bank of China என்ற மூன்று சீன வங்கிகளிடம் இருந்து வாங்கிய  717 மில்லியன் டாலர் கடனை (ரூ.5,400 கோடி) 21 நாட்களுக்குள் செலுத்துமாறு லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லண்டனில் உள்ள இங்கிலாந்து மற்றும்  வேல்ஸ்-கான உயர் நீதிமன்றத்தில் செயல்பட்டு வருகிறது. இதன் வர்த்தக பிரிவுக்கான நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் நீதிபதி நைஜல் டியர் (Js Nigel Teare) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ALSO READ  டிரம்பின் 'தீவிர பக்தர்' மாரடைப்பால் காலமானார்...

மும்பையில் செயல்பட்டு வரும் சீன தொழில் மற்றும் வர்த்தக வங்கியில் (Industrial and Commercial Bank of China Ltd Mumbai Branch) அனில் அம்பானியின் நிறுவனங்கள் 2012ம் ஆண்டு வாங்கிய கடன் திரும்ப செலுத்தப்படவில்லை.

இது குறித்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், கடன் தொகைக்கு ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானிக்கும் பொறுப்பு உள்ளது என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

எனவே, சீன வங்கிகளிடம் இருந்து பெற்ற 5,400 கோடியை 21 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ALSO READ  கடற்கரையில் மணல் சிற்பம்; அமிதாப்பச்சன் சிலைக்கு வழிபாடு- அமிதாப் நலம்பெற ரசிகர்கள் வேண்டுதல்... 

அதே சமயம், இந்த கடன் தொகைக்கு அனில் அம்பானி கையெழுத்திடவில்லை என்றும், இது தொடர்பாக சட்ட ரீதியான ஆலோசனைகளைப் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அனில் அம்பானியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

உலகப் பணக்காரர் வரிசையில் இடம்பெற்றுள்ள முகேஷ் அம்பானியின் தம்பியான அனில் அம்பானியின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு பூஜ்யம் என்று கூறப்படுகிறது. 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியா-அமெரிக்கா இடையிலான 2வது ‘டூ பிளஸ் டூ’ விரிவுபடுத்த ஒப்பந்தம்…

Admin

காதலுக்கு எதிர்ப்பு : பெண்ணின் பிறப்புறுப்பில் சுட்டு கொன்ற பெற்றோர்.

naveen santhakumar

MostBet KZ казино и букмекерская контора МостБет КЗ, рабочее зеркало на сегодн

Shobika