இந்தியா

ஓடும் பேருந்தில் பயணிகள் இருக்கையிலேயே இளம்பெண் பாலியல் பலாத்காரம்… போலீஸ் வலைவீச்சு…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

லக்னோ:-

உத்தர பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் பயணிகள் பலர் இருக்கையிலேயே பெண் ஒருவர் பேருந்து ஓட்டுநரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் நகரிலிருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் சென்றுள்ளார். அவருக்கு பேருந்தில் கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 10-12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.

இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் 2 பேரும் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கவுதம் புத்தா நகர் போலீசார் IPC 376 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ALSO READ  லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்… 

இது குறித்து போலீஸ் டி.எஸ்.பி விரிந்த சுக்கலா (பெண்கள் பாதுகாப்பு) கூறும் போது:-

லக்னோவுக்கும், மதுராவுக்கும் இடையே பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது இரவு 2 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.பேருந்தின் கடைசி சீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர்.

ALSO READ  யோகா செய்தால் கொரோனாவிலிருந்து தப்பலாம்- யோகி ஆதித்யநாத்...

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை கைது செய்யப்பட்டு உள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரு நபர்களைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த பேருந்தின் பதிவெண் UP 17 பாக்பட் (Baghpat) மாவட்டத்தை சேர்ந்தது. மேலும் இந்த பேருந்தில் உரிமையாளர் நொய்டா பகுதியை சேர்ந்தவர் தவிர இந்த பேருந்தில் பயணம் செய்து பிற பயணிகளிடமும் விசாரணை நடைபெற உள்ளது என்று கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வை பெண்களும் எழுதலாம் – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

News Editor

ஹத்ராஸ் சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் ஒரு கொடூர சம்பவம்:

naveen santhakumar

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் ராஜினாமா- பின்னணி என்ன??… 

naveen santhakumar