லைஃப் ஸ்டைல்

கர்ப்ப காலத்தில் ஏற்படும் முதுகு வலிக்கு தீர்வு இதோ….!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கர்ப்ப காலத்தின் தொடக்கத்திலிருந்து பிரசவித்த பிறகு சுமார் 6 மாதங்கள் அல்லது அதற்குப் பிறகும்கூட சிலருக்கு முதுகுவலி வரலாம். கர்ப்ப காலத்தின்போது, முதுகுத் தண்டுக்கு ஆதாரமாகவுள்ள தசைநார்கள் மிருதுவாகின்றன.

How to ease back pain during pregnancy | BabyCenter

கர்ப்பத்தின்போது உடல் பருமன் அதிகரிப்பதால் கர்ப்பிணிகளின் ஈர்ப்பு விசையும் இடம் மாறுகிறது. தவிர நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும், நின்றிருப்பதும் இந்த நிலையை மோசமாக்கும். எனவே, இந்த நிலைகளை கர்ப்ப காலத்திலும், பிரசவத்துக்குப் பின்னரும் தவிருங்கள்.

  • பின்னோக்கிச் சாய்ந்து நிற்பது உங்களுக்கு வசதியாக இருக்கும். ஆனால், அப்படி நிற்காதீர்கள். நேராக நிமிர்ந்து, கால்களை அகற்றி நிற்பதே சரியான பொசிஷன்.
  • உட்காரும்போது முதுகுக்கு சப்போர்ட் இருக்கும்படிப் பார்த்து உட்காருங்கள்
  • தரையிலிருந்து பொருட்களைத் தூக்கும்போது அல்லது எடுக்கும்போது, முன்பக்கம் குனிந்து எடுப்பதைத் தவிருங்கள். முதுகை நேராக வைத்து, முழங்காலை மடக்கி பிறகு அந்தப் பொருளைத் தூக்க வேண்டும்.
  • பளுவான பொருட்களை உங்கள் உடலோடு அணைத்தபடி பிடித்துத் தூக்குங்கள்.
  • முடிந்தவரை கூன் போடுவதுபோல வளைவதைத் தவிருங்கள்.
  • முதுகுவலியைப் போக்குவதற்கு மசாஜ்கூட பயன் தரும்.
  • கர்ப்ப காலத்தின் இறுதி மாதங்களில் நீங்கள் போதுமான ஓய்வு எடுத்துக் கொள்கிறீர்களா…??? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். பிரசவமான பின்னும் ஓய்வு என்கிற பெயரில் ஒரே இடத்தில் உட்காராமல் அவ்வப்போது நடப்பது முக்கியம்.

Share
ALSO READ  முகப்பொலிவிற்கு இதையெல்லாம் பாலோவ் பண்ணுங்க.....
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கர்ப்ப காலத்தில் பெண்கள் உண்ணவேண்டிய உணவுகள் :

Shobika

அதிகாலையில் எழுந்து கொள்ள ஆசையா?

Admin

சின்ன சின்ன சமையல் டிப்ஸ் !

Admin