லைஃப் ஸ்டைல்

நமது முன்னோர்கள் “தன்னிகரற்ற” மாபெரும் அறிவாளிகள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1…இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு,பழக்கம் என நினைச்சுக்கிட்டு இருக்கோம். நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா…?

“சூரியன் உதிக்கும் திசை கிழக்கு”என்று சிறு பிள்ளைகளுக்கு சொல்லித் தருகிறோம்.என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை…என்று தான் சொல்ல வேண்டும். வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் சான்று. ஆம் சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும். அதன் பின் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், தென்கிழக்கு நோக்கி நகரும். இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம். இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் சித்திரை 1 (equinox) – புத்தாண்டு. சரியாக வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1(summer solstice) – ஆடிப்பிறப்பு. .மறுபடியும் கிழக்குக்கு வரும்போது “ஐப்பசி 1”,தீபாவளி(equinox). மீண்டும் சரியாக தென்கிழக்கு – தை (winter solstice) – பொங்கல். இந்த மாற்றங்களையும், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களையும் நன்கு உணர்ந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள். இது நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதில் மறைந்துள்ள அறிவியலையும் எடுத்து செல்ல உன்னத வழியாக உள்ளது.

ALSO READ  எந்த மாதிரி பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்?? 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பாதிப்புகளிலிருந்து கண்களை பாதுகாக்க எளிய வழிமுறைகள் :

naveen santhakumar

தொடங்கியது காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு!!

Shanthi

ஆரோக்கியம் தரும் பாதாம் பருப்பால் ஏற்படும் தீமைகள் என்ன தெரியுமா?

naveen santhakumar