லைஃப் ஸ்டைல்

பட்டு போல் பளபளக்க பயனுள்ள குறிப்புகள்….!!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

எல்லோருக்குமே தங்களுடைய முகம் அழகாக இருக்கவேண்டும் என்பதில் அக்கறை அதிகம்.முகத்தில் இருக்கும் தோல் பகுதி மிகவும் மென்மையானது.இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களும், ஆரோக்கிய பிரச்சனைகளும் தான் காரணம்.

அக்காலத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அழகாக இளமையோடு இருப்பதற்கு காரணம், அவர்களது உடல் மற்றும் சரும பராமரிப்புக்கள் தான். அவர்கள் பராமரிப்பதற்கு பயன்படுத்திய பொருட்களைப் பார்த்தால் சாதாரணமாக வீட்டில் இருக்கும் பொருட்கள் தான்.

தண்ணீர்:

ஒரு நாளுக்கு எட்டு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். நீர்ச்சத்து மிக்க பழங்களை அன்றாடம் சாப்பிடுவது நல்லது. இதன் மூலம் சருமம் குளிர்ச்சியாக இருப்பதுடன்,சருமம் சுருங்காமல் இருக்கும்.

தூங்குவதற்கு முன்:

இரவில் தூங்குவதற்கு முன் முகத்தை நன்கு கழுவிட்டு படுக்கச் செல்லவும். இது சருமத்தை பாதிப்பிலிருந்து தடுப்பதுடன், அழுக்கினை அவ்வப்போது அகற்ற உதவுகிறது.

ALSO READ  மாம்பழமும் கிருஷ்ணகிரியும்

வைட்டமின் E:

வைட்டமின் E மாத்திரைகளை வாங்கி, அதனுள் இருக்கும் எண்ணெயை எடுத்து முகச்சுருக்கங்களில் தடவி மாசாஜ் செய்து வந்தால், சுருக்கங்கள் மறைந்து முகம் அழகாக இருக்கும்.

உலர்ந்த ரோஜா இதழ்:

உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

தக்காளி பழம்:

தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

ஓட்ஸ்:

தேவையான அளவு ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சருமம் வெண்மை நிறமாக மாறும்.

ALSO READ  முகத்தில் எண்ணெய் வழிகிறதா…???வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்தே தீர்வு காணலாம்…!

பாதாம்:

பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் பூசி வர வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

மஞ்சள்:

மஞ்சள் ஒரு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் உங்கள் சருமம் பட்டுபோல மிருதுவாக மாறும். 


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா செல்ல நாளை முதல் தடை

Admin

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள வேண்டுமா? இதை செய்யுங்கள்!

Admin

ப்ளாக் டீ

Admin