லைஃப் ஸ்டைல்

சுத்தம் என்ற பெயரில் தினமும் நாம் செய்யும் தவறுகள்….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சுத்தமாக இருக்கிறேன் என்று தினமும் பல முறை குளிப்பது, கையை மற்றும் முகத்தை நாள் தோறும் கழுவிக் கொண்டே இருப்பது , வியர்வையை துடைப்பதில் இருந்து உள்ளாடைகளை துவைப்பது வரை நாம் பல தவறுகளை செய்து வருகிறோம்.

சிலர் ஒரு நாளைக்கு இரண்டு; மூன்று முறை (காலை, மாலை, இரவு) குளிப்பார்கள்.

இவ்வாறு குளிப்பது நமது சருமத்தில் வறட்சியை உண்டாக்கும். இதனால் சருமம் வறண்டு எரிச்சல் ஏற்படும். எனவே, இதை தவிர்த்துவிடுங்கள்.

கைகளை கொண்டு வெறுமென துடைப்பதை தவிர்த்து, சுத்தமான டவல் அல்லது கர்சீப் கொண்டு துடைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

ஏனெனில், வியர்வையில் தான் எண்ணற்ற பாக்டீரியாக்கள் இருக்கின்றன.

ALSO READ  பிறந்த குழந்தைங்க கிட்ட இவ்வளவு விஷயம் இருக்கா??

அதேபோல், அளவுக்கு அதிகமாக கை கழுவும் லோஷன் பயன்படுத்துவது மற்றும் ஃபேஸ்வாஷ் க்ரீம் பயன்படுத்துவது நல்லதல்ல.

நாம் அதிகமாக பயன்படுத்துவதால் சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இது அமைகிறது.

தினமும் ஒருவேளை மட்டும் பல் துலக்குவது போதாது. காலை, இரவு என இரு முறை பல் துலக்குவது அவசியம். ஏனெனில், இரவு சாப்பிட்ட உணவின் மூலமாக தான் நிறைய பாக்டீரியாக்கள் உண்டாகின்றன.

சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கண்டிப்பாக கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்கும்; ஆரோக்கியம் கூடும்.

ALSO READ  மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா…. இத try பண்ணுங்க…

தரையில் விரிக்கப்பட்டிருக்கும் கார்பெட், பாய்கள், பெட்ஷீட்கள் போன்றவற்றை மாதத்திற்கு ஒருமுறையாவது துவைக்க வேண்டும்.

ஏனெனில் இதன் மூலமாக தான் நிறைய சுவாச பிரச்சனைகள் நமக்கு வருகின்றன.

முக்கியமாக உள்ளாடைகளை வாஷின் மெஷினில் துவைக்க கூடாது. அதேபோல், மற்ற ஆடைகளுடனும் சேர்த்து துவைப்பதை தவிர்த்துவிடுங்கள். இதமான நீரில், தனியாக தான் நமது உள்ளாடைகளை துவைக்க வேண்டும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கழுத்தின் கருமையை போக்க பயனுள்ள குறிப்புகள் :

Shobika

சில மனிதர்கள் – சில நினைவுகள் பகுதி -10 (வரலாறு)

News Editor

ஒவ்வொன்றும் ஒருவிதம்…பளபளக்கும் பட்டு பாவாடைகள் பலவிதம்….

Shobika