தமிழகம்

தமிழக அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்..!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய அரசின் நல் ஆளுமை திறனுக்கான தரவரிசையில் தமிழகம் முதலிடம்.

‘இந்தியா டுடே’ நடத்திய ஆய்வில் ஒட்டுமொத்த செயல்திறன்மிக்க மாநிலமாக இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு.

மதிப்புமிக்க ‘கிரிஷி கர்மான்’ விருதினை ஐந்து முறை பெற்று சாதனை.

தொடர்ந்து ஐந்து வருடங்களாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் மிகச் சிறந்த மாநிலத்திற்கான விருது.

ஊராட்சிகளில் மின்னணு ஆளுமை, திறன் மேம்பாடு, குழந்தை பராமரிப்பு, கிராம சபை செயல்பாட்டிற்கென மொத்தம் 12 தேசிய விருது.

பெங்களூருவில் உள்ள ‘பொது விவகாரங்கள் மையம்’ நல் ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு.

ஃபிராஸ்ட் அண்ட் சல்லிவன் (Frost & Sullivan) நிறுவனம் வெளியிட்ட ‘ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கான’ மாநிலங்களின் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தமிழகம் இரண்டாவது இடம்.

பாலூட்டும் தாய்மார்களின் இறப்பு விகிதத்தை வெகுவாகக் குறைத்தற்காக மத்திய அரசின் விருது.

மத்திய அரசின் ‘பெண் குழந்தைகளை காப்போம்; பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் ( Beti Bachao; Beti Padhao ) என்ற திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மத்திய அரசின் விருது.

ALSO READ  விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி:

தூய்மை இந்தியா (Clean India) திட்டத்தின் கீழ் சிறந்த மாநிலத்திற்கான விருது.

பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்கியதற்காக விருது.

ஊரக வளர்ச்சித் துறையின் போற்றத்தக்க செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகள்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்திற்காக 4 தேசிய விருதுகள்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக கடன் உதவி வழங்கியதற்காக தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தேசிய விருது.

இணைய வழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது.

மூத்த குடிமக்களுக்கான சிறந்த சேவைக்கான தேசிய விருது.

உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் விருது.

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருது.

தமிழக அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை விருது.

ALSO READ  அம்மா உணவகம்…..மக்களிடமிருந்து நிதி திரட்ட ஏற்பாடு…..

சிறந்த சாலை பாதுகாப்பிற்காக மத்திய அரசின் விருது.

தமிழக போக்குவரத்து கழகங்களை சிறந்த செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகளை.

தமிழகம் உயர்கல்வி சேர்க்கையில் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

பர்கூர் கால்நடை ஆராய்ச்சி நிலையம் ‘தேசிய காமதேனு’ விருது.

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் முதுநிலை விருது.

இந்தியாவில் உள்ள மீன்வள பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் முதலிடம்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு மத்திய அரசு சிறந்த மேலாண்மைக்கான விருது.

2018 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் தேசிய நீர் ஆதார விருது.

2018 ஆம் ஆண்டிற்கான மத்திய அரசின் தூய்மை நகரங்களுக்கான ‘ஸ்வச் சுர்வேக்ஷன்’ விருது.

மதுரை ‘அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோவில்’-க்கு மத்திய அரசின் ‘தூய்மையான புனித தளத்திற்கான’ விருது.

பழமை மாறாமல் புணரமைப்பு திருப்பணி மேற்கொண்டதாக ஸ்ரீரங்கம் ‘அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்’-க்கு யுனஸ்கோ (UNESCO) விருது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பால் தினகரனுக்கு சம்மன்…..கணக்கில் வராத முதலீடுகள் கண்டுபிடிப்பு……

naveen santhakumar

389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது 15 ஆசிரியர்களுக்கு நல்லாசியர் விருது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

News Editor

அக்டோபர் – 1ந் தேதி முதல் குளிர்சாதன அரசு பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு…!!

Admin