உலகம் லைஃப் ஸ்டைல்

மன அழுத்தத்தால் அவதிப்படுகிறீர்களா…. இத try பண்ணுங்க…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இன்றைய சூழ்நிலையில் மன அழுத்தம் என்பது பொதுவான ஒன்றாக மாறிவிட்டது. மன அழுத்தம் உள்ளவர்கள் பொதுவாக யாரிடமும் மனம்விட்டுப் பேச மாட்டார்கள். தங்களின் மனதிலேயே எதையாவது நினைத்துக் கொண்டு இருப்பார்கள்.கவலையாக உணர்வது எப்போதும் கோபமாக இருப்பது, தூக்கமின்மை ஆகியவை மன அழுத்தத்தின் அறிகுறிகள் ஆகும். இவ்வாறு உங்களுக்கு தெரிந்தால் உடனே நீங்கள் மருத்துவரை சந்திப்பது நல்லது. ஆனால் நீங்கள் மற்றவர்களிடம் சிரித்து பேசுவது மூலமும், மனம் விட்டு பேசுவது போலவும் மன அழுத்தத்தை குறைக்க முடியும் .அப்படி மன அழுத்தத்தை குறைப்பதற்கான சில டிப்ஸ் இதோ

1.இசை

இசை என்று சொன்னால் யாருக்குத்தான் பிடிக்காது என்று கேட்போம். ஆனால் மன அழுத்தத்தில் உள்ளவர்கள் பொதுவாக இசையை கேட்டு ரசிக்க மாட்டார்கள் .எனவே நீங்கள் உங்களுக்கு பிடித்த பாடலை கேட்கும் போது உங்களின் மன நிலை மாறலாம். அதேபோல் ஜாலியான பாடல்களைக் கேட்பது மூலம் உங்களின் எண்ணங்களும் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ALSO READ  பெண்களின் முக பொலிவை இணையம் பாழாக்குமா..????
  1. யோகா

நம்முடைய உடல் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் முதலில் நமது மனம் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் .அதற்கு சிறந்தது யோகா மற்றும் தியானம். எனவே நீங்கள் தினமும் யோகா செய்து வந்தால் உங்களின் சிந்தனைகள் மாறி மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்.

  1. நல்ல எண்ணங்கள் உள்ளவர்களுடன் பழகுவது

நாம் எப்படி பழகும் போது இவர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கிறது, இவருக்கு கெட்ட எண்ணங்கள் இருக்கிறது என்று யூகிக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்களை சுற்றி உள்ளவர்கள் என்ன பேசுகிறீர்களோ, அது தான் உங்கள் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும் . எனவே உங்களின் நண்பர்களை நீங்கள் கவனமாக தேர்வு செய்ய வேண்டும். நல்ல நண்பர்களுடன் மனம் விட்டு பேசி சிரிப்பதன் மூலம் உங்கள் மன அழுத்தம் குறையும்.

ALSO READ  என்னது! சீன அதிபர் Xi Jinping இல்ல Kim Jong Un-னா பா.ஜ.க. தொண்டர்கள் செய்த அட்ராசிட்டி…
  1. உறக்கம்

ஒரு மனிதன் சராசரியாக தினமும் 8 மணி நேரம் தூங்க வேண்டும்.அதற்கு குறைவாக தூங்கினால் அவனால் சரியாக செயல்பட முடியாது எனவே நன்றாக தூங்கி, ஆரோக்கியமான உணவு எடுத்துக் கொள்வதன் மூலம் மன அழுத்தம் குறையும்.

  1. மது பழக்கத்தை தவிர்த்தல்

இன்றைய இளைஞர்கள் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனையை நேருக்கு நேர் மோத முடியாமல் மது பழக்கத்திற்கு ஆளாகி விடுகின்றனர். அந்த நேரத்தில் அது சந்தோஷத்தைக் கொடுத்தாலும். பின்பு மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. எனவே மது, புகைப்பழக்கம், போதைப் பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்தால் உங்களுக்கு மன அழுத்தத்தில் இருந்து விரைவில் வெளிவர உதவும்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

தொழிலாளர்கள் நலனுக்காக….. இந்தியாவிற்கு அமெரிக்கா 15 கோடி நிதியுதவி:

naveen santhakumar

மினி லிபெர்ட்டி: அமெரிக்காவுக்கு மீண்டும் சுதந்திர தேவி சிலை பரிசளித்த பிரான்ஸ்…!

naveen santhakumar

பாஸ்போர்ட்டை கடித்து குதறிய நாய்க்கு நன்றி தெரிவித்த பெண் !

Admin