அரசியல்

அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை நிபுணர்களுடன் முதல்வர் ஆலோசனை:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை: 

கொரோனா பரவலை தடுக்க ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை லாக்டவுன் அமலில் உள்ளது. லாக்டவுனை மேலும் நீடிக்கலாமா? இ பாஸ் முறையை ரத்து செய்யலாமா? என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம் என்பது பற்றியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும் மருத்துவத்துறை நிபுணர்களுடன் முதல்வர் பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தளர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இரண்டரை கோடி பேரை தொட்டுப்பார்த்துள்ளது. 1.60 கோடி பேருக்கு மேல் குணமடைந்துள்ளனர் என்றாலும் தினசரியும் பல்லாயிரக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 8 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்

ALSO READ  முதல்வராகும் ஸ்டாலினுக்கு நடிகர் கமல் நேரில் வாழ்த்து !

இந்தியாவில் 33 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.25 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். தமிழ்நாட்டில் 4 லட்சம் பேர் வரை கொரோனா வைரஸ்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாத கடைசி முதல் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு சில தளர்வுகளுடன், ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஏழாம் கட்டமாக லாக் டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

ஏழாம் கட்ட லாக்டவுன் முடிய உள்ள நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில் லாக்டவுன் நீட்டிப்பு பற்றியும் இ பாஸ் ரத்து செய்வது பற்றியும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

முதல்வராகும் ஸ்டாலினுக்கு நடிகர் கமல் நேரில் வாழ்த்து !

News Editor

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு விலகல்-கருணாஸ் பேட்டி !

News Editor

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி தான் அமையும்; ஜான் பாண்டியன் நம்பிக்கை!

News Editor