அரசியல்

இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் ஸ்டாலின்… புகழ்ந்து தள்ளிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,05) கவர்னர் ஆர்என் ரவி உரையுடன் துவங்கியது. இசைக்கல்லூரியை சேர்ந்த ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாடினர் . கூட்டத்தொடரில் வணக்கம் எனக் கூறி உரையை தொடங்கினார். ஆளுநர் உரையாற்றியதாவது: புத்தாண்டு, பொங்கல் திருநாள் வாழ்த்துகள். தமிழக மக்கள் நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தி ஆக்ஸிஜனும் அத்தியாவசிய மருந்துகளும் மாநிலம் முழுவதும் கிடைப்பதை முதல்வர் உறுதி செய்தார்.மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள்.

முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.மெகா முகாம்கள் நடத்தி அதன் மூலம் தடுப்பூசி போடும் எண்ணிக்கை அதிகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 86.95 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒமைக்ரானை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. ஒமைக்ரான் மற்றும் அதன் சவால்களை சமாளிக்க அரசு தயாராக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. சிறார்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

ஒமைக்ரான் பரிசோதனை ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழகத்தில்தான்.கொரோனா நிவாரண நிதியாக 543 கோடி ரூபாய் வந்த நிலையில் 541.64 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த 27,432 குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கோவிட் நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரம், மக்கள் வாழ்வாதாரம் பாதிப்படையாமல் கொரோனாவை தமிழக அரசு வெற்றிகரமான கட்டுப்படுத்தியது.

ALSO READ  சசிகலாவின் ஆதரவாளரது கார் பெட்ரோல் ஊற்றி எரிப்பு …!

புதிய அரசில் முதல்வர் காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.387 கோடி மதிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ‛நம்மை காக்கும் 48′ திட்டத்தின் கீழ் விபத்திற்குள்ளான 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 42.99 லட்சம் மக்கள் பலன்பெற்றுள்ளனர்.

மழை வெள்ளத்தால் சாலை உள்ளிட்ட கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.மழை வெள்ள காலங்களில் அணையில் இருந்து நீர் திறப்பதை அரசு முறையாக கையாண்டுள்ளது. நிவாரண பணிகளை முதல்வரே முன்னின்று முடுக்கிவிட்டுள்ளார். சென்னையில் வெள்ள பாதிப்பை தடுக்க நிரந்தரமான செயல்திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சமாளிக்க தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக ஸ்டாலின் உள்ளார் என பாராட்டினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குடியரசு தின அலங்கார ஊர்தி…. முதல்வர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு!

naveen santhakumar

சீமானின் தந்தை காலமானார் !

News Editor

மோடி எங்களுடைய பிரதமர் : பாகிஸ்தான் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி

Admin