சினிமா தமிழகம்

காருக்குள் அழுதாரா விஜய்; பேட்டி அளித்த IT அதிகாரி.

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடந்த இரண்டு நாட்களாகவே ஹாட் டாபிக் ஆஃப் தமிழ்நாடு என்றால் ‘பிகில்’ பட வசூல் சாதனை குறித்த செய்திகளால் நடிகர் விஜய், AGS சினிமாஸ் தயாரிப்பு நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்பு செழியன் இவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனை தான்.

நெய்வேலியில் ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை அழைத்து சென்ற IT அதிகாரிகளில் ஒருவர் காருக்குள் அவரை என்ன செய்தோம் என்று நாளிதழில் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் தெரிவித்திருப்பதாவது:-
நடிகர் விஜய் எப்போதும் அவரது ஜாக்குவார் காரில்தான் படப்பிடிப்புக்குச் செல்வார். நாங்கள் படப்பிடிப்பு தளத்தில் நுழைந்து அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றோம்.

விஜய் அவரது காரில் வர அனுமதி கேட்டதும் IT அதிகாரிகள் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் கார் நெய்வேலியைத் தாண்டியதும் நாங்கள் அவர்களை எங்கள் இன்னோவா காரில் ஏற்றி கொண்டோம்.

அப்போது காரில் அமர்ந்திருந்த நாங்கள் எங்கள் மொபைலில் எங்களின் உயர் அதிகாரிகளிடம் பேசுவது போன்று பேசினோம். என்ன பேசினோம் என்றால், ‘அதெல்லாம் விட மாட்டோம், நசுக்கிடுவோம் சார். எத்தனையோ VIP-களை அடிச்சிருக்கோம். இதுல என்ன சார் இருக்கு’ என்று பயமுறுத்துவது போன்று பேசி வந்தோம்.

ALSO READ  விஜய் பட நடிகர் காலமானார் !

அதன்பிறகு விஜய்யின் இருபுறமும் நாங்கள் அமர்ந்தோம். பிறகு சென்னைக்கு வரும் வரை கேள்விகளால் அவரை துளைத்தெடுத்தோம்.

லண்டனில் இருக்கும் அவரது மாமனார் சொர்ணலிங்கத்திடமும் விசாரணை செய்தோம்.

அதாவது விஜய்க்கு 1200 கோடிகளுக்கும் மேலுள்ள சொத்துக்கள், சர்வதேச வங்கிகளில் கடன் வாங்கி, அதன் மூலம் குவித்த சொத்துக்கள். சென்னை, இலங்கை, மும்பை, கூர்க் உள்ளிட்ட இடங்களில் உள்ள சொத்துக்கள் குறித்த ஆவணங்களைக் காட்டினோம். காட்டிய மறு நொடியில் விஜய் ஆடிபோய்விட்டார்.

‘இந்த சொத்துக்களை எல்லாம் ITல் அட்டாச் செய்தால் உங்கள் நிலைமை மோசமாகும்’ என்று சொல்லவும் அவரின் கண்கள் கலங்க, கதறும் நிலைக்குப் போனார் விஜய். நான் இதை பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து வாங்கிய சொத்துக்கள். ஐ.டியில் எவ்வளவு டேக்ஸ் கட்டணுமோ, அதைக் கட்டிவிடுகிறேன் என தழுதழுத்த குரலில் கூறினார்.

ALSO READ  தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

அவற்றை எல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில்
நீங்கள் வாயை தான் கட்டுப்படுத்த வேண்டும்.

அதேபோன்று நீங்கள் ஜேப்பியார் மகள் ரெஜினா கும்பலுடன் தொடர்பில் இருக்கக் கூடாது.

ஜேப்பியார் மகள் ரெஜினா.

கிறிஸ்தவ மிஷனரிகள் உங்கள் மூலமாகத்தான் பல்வேறு நிதிகளை அனுப்பி வைப்பதாகச் சொல்கிறார்கள்.

மதமாற்றத்துக்கு ஆதரவு கொடுக்கக் கூடாது.

எல்லாவற்றையும் நீங்கள் நிறுத்த வேண்டும் என விடிய விடிய அவரின் வீட்டில் வைத்தே விஜய்க்கு பாடம் எடுத்தோம்.

ITன் இந்த டீலிங்குகளுக்கு விஜய் தற்காலிகமாக OK சொன்னதாகத் தெரிகிறது.

திரையில்தான் எல்லா ஹீரோக்களும் சொக்கத் தங்கமாக மின்னுவார்கள். நிஜத்தில் அனைவரும் Surrender தான் என்று அந்த பேட்டியில் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார் என்று கூறப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த நடிகையிடம் ரூ.35 ஆயிரம் மோசடி

Admin

ரூ.500-க்கு கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழ் விற்பனை – குருவி இளைஞர் கைது

naveen santhakumar

குட்நியூஸ்… வீடு திரும்பினார் வடிவேலு!

naveen santhakumar