தமிழகம்

புனித ஜார்ஜ் கோட்டையும் இன்றும்!!!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சட்டமன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் கூடியது.தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றம் முன்னிருந்த சென்னை மாகாணத்தின் தொடராக கருதப்படுகிறது. 1921-ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்ட மேலவை உருவாக்கப்பட்டது. இம்மேலவையின் ஆயுள் மூன்றாண்டுகளாக முடிவு செய்யப்பட்டது. மேலவையில் 132 உறுப்பினர்கள் இருந்தனர்.அவற்றில் 34 உறுப்பினர்கள் ஆளுநரால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ளவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இம்மன்றத்தின் முதல் கூட்டம் செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் 1921-ம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில் கூடியது. இதன் தொடக்க விழா இங்கிலாந்து கோமகன் கனாட் அவர்களால், அப்பொழுதைய ஆளுநர் வெலிங்டன் பிரபுவின் அழைப்பின் பேரில் தொடங்கி வைக்கப்பட்டது.

ALSO READ  வெறிசோடிய தமிழகம்; இரண்டாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தம்..!

இந்தியாவில் பிரித்தானியரின் முதலாவது கோட்டையாகும்.பிரான்சிஸ்டே, ஆண்ட்ரூ கோகன் என்ற ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியைச் சேர்ந்த இரு அதிகாரிகளின் முயற்சியால் 1639 ஆம் ஆண்டில் கரையோர நகரான சென்னை நகரம் கட்டத் தொடங்கப்பட்டது. இப்பகுதியில் கோட்டை கட்டப்பட்டதால், புதிய குடியேற்றங்களும், வணிக நடவடிக்கைகளும் நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இன்றைய சென்னை நகரம் இக்கோட்டையைச் சுற்றியே உருவானது.

ALSO READ  ஒதுக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- காவல் ஆணையர் எச்சரிக்கை:

ஆங்கில ஆளுநர்களின் தலைமையிடமாக விளங்கிய இக்கோட்டைப் பகுதியில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலக அலுவலகங்கள், அமைச்சர் அலுவலகங்கள், சட்டமன்றங்கள் ஆகியவை உள்ளன. கோட்டைக்கு உள்ளே வர மூன்று வாயில்கள் உள்ளன. கோட்டையைச் சுற்றி அகழி உள்ளதை இன்றும் காணலாம். இவை தவிர மூன்று முக்கியக் கட்டடப் பகுதிகள் உள்ளன. 1.புனித மேரி கிறித்தவ ஆலயம், 2.கிளைவ் மாளிகை, 3.கோட்டை அருங்காட்சியம்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

விபத்தில் சிக்கியவருக்கு உதவிய முதல்வர்!

Shanthi

முழு ஊரடங்கு; விமான சேவைகள் ரத்து !

News Editor

சீமராஜாவாக நடித்ததில் பெருமைப்படுகிறேன்.. சிங்கம்பட்டி ஜமீன் மறைவிற்கு சிவகார்த்திகேயன் இரங்கல்…!

naveen santhakumar