தமிழகம்

ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள்: தமிழக அரசு அரசாணை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஆதரவற்ற பெண்களை தொழில்முனைவோராக மாற்றும் வகையில் 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 விலையில்லா ஆடுகள் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

வாழ்வளிக்காத விலையில்லா ஆடுகள்! | வாழ்வளிக்காத விலையில்லா ஆடுகள்! -  hindutamil.in

ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்க ரூ.75 கோடியே 63 லட்ச ரூபாய் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Govt order passed Five goats are free for helpless woman

இதற்காக ஆதரவற்ற 38 ஆயிரம் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து ஆடுகள் என ஒரு லட்சத்து 94 ஆயிரம் ஆடுகள் வாங்க நிதியை ஒதுக்கியது தமிழ்நாடு அரசு.

ALSO READ  ஆட்சியர் அலுவலகம் முன்பு கொட்டிக்கிடந்த மதுபாட்டில்கள்; போட்டிபோட்டு பொறுக்கிய மதுபிரியர்கள் !

இந்த பயனாளிகளில் 30 % தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவினரைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் எனவும், நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் எனவும், பயனாளிகள் ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  தொழில் கூட்டமைப்பு நடத்தும் கண்காட்சியை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

மேலும், தகுதிவாய்ந்த பயனாளர்களை தேர்ந்தெடுக்கவும், அதனை முறைப்படி வழங்குவதை கண்காணிக்கவும் கால்நடைத்துறையின் துணை இயக்குனர் தலைமையில் குழு அமைத்தும் அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா…

naveen santhakumar

அடுத்த 2 நாட்களுக்கு இந்த ரயில்கள் எல்லாம் ரத்து!

naveen santhakumar

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு… கார், பைக், கறவை மாடு வென்ற வீரர்கள்!

naveen santhakumar