தமிழகம்

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு – கேக் ஊட்டி கொன்ற நண்பர்கள்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நண்பனின் பிறந்தநாளை முன்னிட்டு நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினார்கள். கடைசியில் நண்பனுக்கு கேக் ஊட்டி விளையாடியதில் நண்பன் உயிரிழந்த பகீர் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாக உலா வருகிறது. அந்த வீடியோவில் நண்பர்கள் அனைவரும் சக நண்பனின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு ’Birthday Bashஷ’ கொடுத்த போது பிறந்தநாள் கொண்டாடிய நபர் உயிரிழந்ததாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

சாலையில் ஓராமாக நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடி நண்பனின் பிறந்தநாளை கொண்டாடுகின்றனர். கேக் வெட்டும் அந்த நபருக்கு நண்பர் ஒன்று கூடி பர்த்டே பாஷ் கொடுக்கின்றனர்.

ALSO READ  கிறிஸ்தவத்தின் போலி முகங்களை கிண்டல் செய்த பாஸ்டர்

அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மயக்கமடைந்துவிடுகிறார். உடனடியாக தண்ணீரை எடுத்து முகத்தில் அடிக்கின்றனர் அப்போது அவர் எழவில்லை.

இதனால் அச்சமடைந்த நண்பர்கள் உடனடியாக மயக்கமடைந்தவரை இருசக்கர வாகனத்தில் வைத்து தூக்கி செல்வது வரை அந்த வீடியோவில் உள்ளது.

ALSO READ  பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக் கல்வித்துறையின் திட்டம் இதுதான்!

இந்த வீடியோ இணையத்தில் காண்போரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதேசமயம் இந்த வீடியோ உண்மையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் இந்த சிசிடிவி காட்சிகள் துல்லியமாக பதிவாகியுள்ளதால், இது ஏதேனும் பிராங்க் வீடியோவாக இருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும் இதன் உண்மைத்தன்மை என்ன என்பதை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என்று மக்கள் கூறியுள்ளனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

கொரோனா பரவல் மத்தியில் பரவும் டெங்கு… பீதியில் மக்கள்!

naveen santhakumar

ஒழுங்கின செயல்கள் நடக்கும் இடமாக மாறி வரும் திருத்தணி முருகன் கோவிலுக்கு சொந்தமான தங்கும் விடுதிகள்:

naveen santhakumar

தென் மாவட்டங்களுக்கு இன்று முதல் பொங்கல் சிறப்பு ரயில்கள் இயக்கம்

Admin