தமிழகம்

தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை :

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வெப்பநிலை அதிகபட்சமாக 32 டிகிரி செல்ஷியஸ், குறைந்தபட்சமாக 24 டிகிரி செல்ஷியஸ் அளவிற்கு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  சென்னையில் வாகன கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உலோக சிற்பங்கள் தயார்...

மேலும் இன்றிலிருந்து வருகிற 23-ம் தேதி வரை தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்றானது மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஜூலை 3வது வாரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு?

naveen santhakumar

ஆகஸ்டு 12 முதல் வகுப்புகள் தொடக்கம், ஆக்-ல் தேர்வுகள் – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு!…

naveen santhakumar

ஆன்லைனில் மது விற்பனை உஷார்…

naveen santhakumar