தமிழகம்

கனமழை எச்சரிக்கை – 26 மாவட்டங்களுக்கு விடுமுறை!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் 26 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

26 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் பல மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

இதன்காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ  பள்ளிக்கு வர வேண்டாம்: மாணவர்கள், ஆசிரியர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்!

செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமில்லாது புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்துவருவதால் புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாகப் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது; தினகரன் திட்டவட்டம் !

News Editor

”நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்தவர் சிவாஜி கணேசன்”: ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்

naveen santhakumar

அக்டோபர் 2, காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி..!

Admin